இதயமே நொறுங்கிவிட்டது... அன்னாசி பழத்தில் வெடி மருந்து வைத்து யானை கொல்லப்பட்ட கொடூரம்! பிரபல நடிகை கண்டனம்!

Published : Jun 03, 2020, 07:47 PM ISTUpdated : Jun 03, 2020, 07:57 PM IST
இதயமே நொறுங்கிவிட்டது... அன்னாசி பழத்தில் வெடி மருந்து வைத்து யானை கொல்லப்பட்ட கொடூரம்! பிரபல நடிகை கண்டனம்!

சுருக்கம்

மனிதர்கள் மீது அன்பு காட்டும் விலங்குகளில் ஒன்று யானை. எந்த ஒரு பாவமும் அறியாத யானை ஒன்றிற்கு அன்னாசி பழத்தில் வெடி மருந்து வைத்து கொன்ற கொடூர சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது, மக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மனிதர்கள் மீது அன்பு காட்டும் விலங்குகளில் ஒன்று யானை. எந்த ஒரு பாவமும் அறியாத யானை ஒன்றிற்கு அன்னாசி பழத்தில் வெடி மருந்து வைத்து கொன்ற கொடூர சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தது, மக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சன்னி லியோன் போன்ற பிரபலங்களின் பாஸ்போட் புகைப்படத்தை பாத்துருக்கீங்களா?
 

கடந்த வாரம் கேரள மாநிலம்,  மலப்புரம் பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் கர்ப்பிணி யானை ஒன்று நின்ற நிலையில் இறந்து கண்டுபிடிக்கப்பட்டது. வாயில் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட அனைவர் நெஞ்சங்களையும் சுக்கு நூறாய் நொறுக்கியது அந்த விஷயம்.

அந்த கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர், அந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி மருந்தை வைத்து சாப்பிட கொடுத்துள்ளார். எந்த ஒரு பாவமும் அறியாத அந்த யானை, அந்த வஞ்சகனின் பாசத்தை நம்பி அன்னாசி பழத்தை வாங்கி கடித்த நொடி, வெடிமருந்து வெடித்து அந்த யானையின் நாக்கு , வாய் போன்றவை பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்: அனிதா சம்பத்தை அடுத்து இணையத்தை கலக்கும் செய்திவாசிப்பாளர்..! யார் தெரியுமா?
 

வலியை வெளியில் சொல்ல முடியாமல் அந்த கிராமத்தையே இரண்டு நாட்களாக சுற்றி சுற்றி வந்துள்ளது அந்த யானை. வாயில் உள்ள காயம் பலமாக இருந்ததால், அதனால் உணவும் உண்ண முடியவில்லை. இந்நிலையில் வெள்ளியாற்று தண்ணீரில், நின்று தன்னுடைய காயத்தில் எரிச்சலை தனித்துள்ளது. எனினும் அந்த வெடிமருதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, இன்னும் 18 அல்லது 20 மாதங்களில் குட்டி ஈன்ற தயாராக இருந்த அந்த கர்ப்பிணி யானை நின்ற இடத்திலேயே உயிரிழந்தது.

வெடி மருந்தால் காயமடைந்த யானையை பற்றி அறிந்து, யானையை காப்பற்ற இரண்டு கும்கி யானையோடு சென்ற, வனத்துறை அதிகாரிகள் அந்த யானையை இறந்த நிலையில் தான் அங்கு கண்டனர். மேலும் இந்த யானை வலியால் துடித்துக்கொண்டிருந்த போது கூட, ஒருவரை கூட தாக்கவில்லை என கூறுகிறார்கள்.

மேலும் செய்திகள்: முன்னாள் காதலர் பிரபுதேவாவுடன் நயன்தாரா...? வாய்திறப்பாரா விக்னேஷ் சிவன்!
 

இந்த செய்து குறித்த தகவல் வெளியே வந்ததும், ஏற்கனவே பிரபல நடிகை வரலக்ஷ்மி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகை சிம்ரனும் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், "உண்மையில் இந்த செய்தியை படித்தவுடன் எனது இதயமே நொறுங்கி விட்டது.  இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும், விலங்குகள் மீதான வன்முறை என்பது மிகவும் கொடுமையானது என்றும் கூறியுள்ளார். இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்த செயலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் சிம்ரன்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்