இந்நிலையில் தனது சித்தப்பா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஜாமியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்து, தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக். 45 வயதாகும் இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு ஆலியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். நவாஸுதீன் சித்திக், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரான புதனாவுக்கு சென்றிருந்த நேரத்தில், அவரது இரண்டாவது மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை கிளப்பியது.
இதையும் படிங்க:
அந்த பிரச்சனை அடங்குவதற்கு முன்பு நவாஸுத்தீன் சித்திக் குடும்பத்தில் அடுத்த புயல் வீச ஆரம்பித்துள்ளது. நவாஸுத்தின் சித்திக்கின் தம்பி மகள் அவரது சித்தப்பா மீது கொடுத்துள்ள பரபரப்பு புகார் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரபல நடிகர் நவாஸுதீன் சித்திக்கின் தம்பி மகள் சமீபத்தில் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி, காதலித்த நபரை நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அந்த பெண்ணின் தந்தை அவர் மீது பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க:
இந்நிலையில் தனது சித்தப்பா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஜாமியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தனக்கு 9 வயது இருந்த போது எனது சித்தப்பா எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என் சித்தப்பா என்பதால் அப்பொழுது எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் வளர்ந்த பிறகு தான் அவர் என்னை தொட்டது தவறு என்பதை புரிந்து கொண்டேன். அதனால் இப்போது புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் தனது பெரியப்பாவான நவாஸுத்தீனிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும் கூறியதாகவும், ஆனால் அவரோ சித்தப்பா அப்படி செய்திருக்க மாட்டார் என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!
தனது திருமணம் விவகாரம் குடும்பத்தினருக்கு பிடிக்காததால் கணவர் குடும்பத்தினர் மீது பல பொய் வழக்குகளை தொடர்வதாகவும், தற்போது பாலியல் புகார் கொடுத்ததால் எனது தந்தையே புதிதாக பல சிக்கல்களை எனக்கு கொடுக்க கூடும் என்றும் நவாஸுத்தின் சித்திக்கின் தம்பி மகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.