அப்பா ரோபோ சங்கர் முகத்தில் காரித் துப்பிய “பிகில்” இந்திரஜா... வைரலாகும் வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 03, 2020, 03:46 PM ISTUpdated : Jun 23, 2020, 10:26 AM IST
அப்பா ரோபோ சங்கர் முகத்தில் காரித் துப்பிய “பிகில்” இந்திரஜா... வைரலாகும் வீடியோ...!

சுருக்கம்

தற்போது அப்பா, மகள் சூப்பர் காம்பினேஷனில் வெளியாகியுள்ள டிக்-டாக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அப்பா, அம்மாவின் புகழைத் தாண்டி சின்ன வயசிலேயே சோசியல் மீடியா செலிபிரிட்டியாக வலம் வருபவர் இந்திரஜா. இப்படி சொல்வதை விட பிகில் பாண்டியம்மாள் என்று சொன்னால் பலரும் டக்கென புரிந்துவிடும்.  அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. அந்த படத்தில் விஜய் அவரை குண்டம்மா... குண்டம்மா... என அழைத்து வெறியேத்தும் சீன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த ஒரே சீனில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்துவிட்டார் பாண்டியம்மாள்.... இல்லை, இல்லை இந்திரஜா. 

இதையும் படிங்க: “பலாத்காரம் செய்வோம் என மிரட்டுகிறார்கள்”... பிரபல நடிகரின் ரசிகர்கள் மீது நடிகை பரபரப்பு புகார்...!

முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த இந்திரஜாவின் டிக்-டாக் வீடியோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அப்பா, அம்மா மற்றும் தங்கையுடன் சேர்ந்து இந்திரஜா செய்யும் டிக்-டாக் சேட்டைகள் அனைத்தும் சோசியல் மீடியாவில் ரொம்ப பிரபலம். குறிப்பாக அப்பா ரோபா சங்கருடன் சேர்ந்து விதவிதமான டிக்-டாக் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட இந்திரஜா தனது அப்பா ரோபோ சங்கர் உடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாட்டிற்கு போட்ட சூப்பர் டான்ஸ் செம்ம வைரலானது. 

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

தற்போது அப்பா, மகள் சூப்பர் காம்பினேஷனில் வெளியாகியுள்ள டிக்-டாக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் வெளிவந்த தேவா படத்தில் மணிவண்ணன், மன்சூர் அலிகானும் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாட்டிற்கு ரோபோ சங்கர் டிக்-டாக் செய்துள்ளார். சின்ன பொண்ணும் வேணாம் மாமா, பெரிய பொண்ணும் வேணாம் மாமா என்ற வரிகளுக்கு டிக்-டாக் செய்ய, அவருக்கு பின்னால் இருந்து வெளியே வரும் இந்திரஜா, வெண்ணிற ஆடை மூர்த்தி குரலில் அவரை கலாய்த்துவிட்டு, முகத்தில் காரித்துப்பிகிறார். டிக்-டாக் வீடியோவிற்காக இப்படி இந்திரஜா செய்ததை சிலர் விமர்சித்திருந்தாலும், அப்பா, மகளின் அசத்தலான நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்
தங்கமயிலின் அதிரடி முடிவு! - அம்மாவை நம்பினால் வேலைக்காது வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா; நீதி கிடைக்குமா?