சிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கும் இப்படி ஒரு விளையாட்டு திறமையா..? முதல் இடத்தை பிடித்து அசத்தல்!

Published : Mar 30, 2021, 06:29 PM IST
சிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கும் இப்படி ஒரு விளையாட்டு திறமையா..? முதல் இடத்தை பிடித்து அசத்தல்!

சுருக்கம்

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த, ரெஜினா கஸன்ட்ரா நடிப்பைத் தாண்டி தன்னுள் ஒளிந்துள்ள விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி, முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.  இதுகுறித்த வீடியோவில் அவர் வெளியிட ரசிகர்கள் பலர் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த, ரெஜினா கஸன்ட்ரா நடிப்பைத் தாண்டி தன்னுள் ஒளிந்துள்ள விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி, முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.  இதுகுறித்த வீடியோவில் அவர் வெளியிட ரசிகர்கள் பலர் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ரெஜினா கஸன்ட்ரா தமிழில் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற்ற போதிலும், அவருக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கிய இவர், அங்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். முன்னணி நாயகியாக வலம் வர துவங்கிய இவருக்கு, தமிழிலும் பல இயக்குனர்கள் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்: கச்சிதமாக பொருந்தும் கறுப்பு நிற உடையில்... லைட்டாக இடையைக் காட்டி மயக்கும் பிரியா பவானி ஷங்கர்...!
 

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரெஜினா நடித்து, 'நெஞ்சம்மறப்பதில்லை' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்தது. மேலும் விஷாலின் 'சாக்ரா' படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். இந்நிலையில்  ரெஜினா சமீபகாலமாகவே நீர் சறுக்கு விளையாட்டு போட்டியில் அதிக கவனம் செலுத்தி வந்தார், என்பதை ரசிகர்களுக்கு விதமாக, அவ்வப்போது  சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.  தற்போது துடுப்பு கொண்ட நீர் சறுக்கு விளையாட்டு போட்டிகளில் இவர் முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்: நடிகை அம்பிகாவின் ஆச்சரியப்படுத்தும்... பலரும் பார்த்திடாத அரிய புகைப்பட தொகுப்பு!
 

இது குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் "நான் முதலிடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும்,  தனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சிக்கும் நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்". பிரபலங்கள் பலரும் சமீபகாலமாக  உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற வித்தியாசமான பயிற்சிகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வருவது வழக்கமாகி வருகிறது மேலும் ரசிகர்களும், ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தங்களுடைய வாழ்த்துகளையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்