திரையுலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் வீரருக்கு கொரோனா... அதிர்ச்சியில் விக்ரம் படக்குழு!

Published : Mar 30, 2021, 01:37 PM IST
திரையுலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் வீரருக்கு கொரோனா... அதிர்ச்சியில் விக்ரம் படக்குழு!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்துள்ள   இர்பான் பதானுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்த நிலையில், மீண்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வேகமெடுக்க துவங்கியுள்ளது. குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மேலும் செய்திகள்: இயக்குனராக அவதாரம் எடுத்த பா.ரஞ்சித் பட இளம் நடிகர்! குவியும் வாழ்த்து..!
 

கொரோனா மீண்டும் தன்னுடைய சுயரூபத்தை காட்ட துவங்கியுள்ளதால், சுகாதாரத்துறை... மக்கள் வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்துள்ள   இர்பான் பதானுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: நடிகை ரோஜா திடீரென மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்களுக்கு ஆர்.கே.செல்வமணி சொன்ன அதிர்ச்சி செய்தி!
 

இர்பான் பதான், தற்போது நடிகர் விக்ரம், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்துள்ள ’கோப்ரா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு, மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் உரிய சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்: 'மாஸ்டர்' பட இயக்குனரை தொடர்ந்து பிரபல நாயகிக்கு கொரோனா!
 

சமீபத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஓய்வு பெற்ற வீரர்கள் கலந்து கொண்டனர் என்பதும் இந்த போட்டியில் கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்ட இர்பான் பதானுக்கும் தற்போது கொரோனா பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்