திரையுலகினர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரபாஸின் ஆரஞ்சு கலர் கார்! இத்தனை கோடியா?

Published : Mar 30, 2021, 05:09 PM IST
திரையுலகினர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரபாஸின் ஆரஞ்சு கலர் கார்! இத்தனை கோடியா?

சுருக்கம்

இந்நிலையில் பிரபாஸ் தற்போது வாங்கியுள்ள ஆரஞ்சி நிற கார் குறித்த தகவலும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

பாகுபலி நாயகன் பிரபாஸ்  'ரதே ஷ்யாம்' , 'சலார்' , 'ஆதிபுருஷ்', என அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், திரையுலகினர் அனைவரையும் திரும்பி பார்க்கவைக்கும் அளவில், புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட வெளிவராத நிலையில், தற்போது மூன்று படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.  'ராதே ஷியாம்', 'ஆதிபுருஷ்', மற்றும் 'சலார்' ஆகிய படங்கள் தான் இவரது கை வசம் உள்ளது. கொரோனா பிரச்சனையின் காரணமாக படப்பிடிப்பு பணிகள் தாமதமானாலும், ஒரே நேரத்தில் தன்னுடைய படங்களை நடித்து கொடுத்துள்ளார் பிரபாஸ். இந்த படங்களின் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபாஸ் தற்போது வாங்கியுள்ள ஆரஞ்சி நிற கார் குறித்த தகவலும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அவர்  ஸ்வாங்கி கார் எனப்படும், லம்போர்கினி அவென்டடோர் காரை வாங்கி ஒட்டு மொத்த திரையுலகினரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்த காரின் விலை சுமார் 6 முதல் 7 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

தன்னுடைய காரில் செம்ம கெத்தாக பிரபாஸ் ஏறும் வீடியோ காட்சி இதோ...


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ