வெள்ளை பிகினியில் காற்று வாங்கும் ராய் லட்சுமி... வைரலாகும் நீச்சல் குளத்தில் கெட்ட ஆட்டம் போட்ட போட்டோஸ்...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 23, 2019, 5:25 PM IST
Highlights

துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளத்தில் பிங்க் நிற பிளமிங்கோ பறவை மீது அமர்ந்து ராய் லட்சுமி கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை அள்ளிவருகிறது.  

விக்ராந்த் உடன் "கற்க கசடற" படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதன் பின்னர் 'தர்மபுரி', 'காஞ்சனா', 'நீயா 2' போன்ற படங்களில் நடித்துள்ளார். ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் இல்லை. தற்போது ராய் லட்சுமி 'சிண்ட்ரெல்லா' என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார். 

அதன் பின்னர் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், புது திட்டம் போட்ட லட்சுமி ராய். கஷ்டப்பட்டு தனது உடல் எடையைக் குறைத்தார். ச்சே! பட வாய்ப்புக்காக லட்சுமி ராய் எப்படி எல்லாம் கஷ்டப்படுறாங்க, நல்ல நடிகையை மதிங்கப்பா என ரசிகர்கள் குரல் கொடுத்தனர். 

ஆனால் டக்கென எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் துபாய்க்கு இன்பச்சுற்றுலா போன லட்சுமி ராய், அங்கு கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 

அந்த புகைப்படங்களுக்கு வந்த லைக்குகளைப் பார்த்த ராய் லட்சுமி, ஹாட் போட்டோ ஷூட்டிற்கு என்று தனி வழியையே கண்டுபிடித்துவிட்டார். அதன்படி தினமும் கலர், கலரான பிகினி உடையில் போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

தற்போது வெள்ளை நிற பிகினியில் கடற்கரையில் காற்று வாங்குவது போலவும், நீச்சல் குளத்தில் துள்ளாட்டம் போட்ட படியும் ராய் லட்சுமி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளத்தில் பிங்க் நிற பிளமிங்கோ பறவை மீது அமர்ந்து ராய் லட்சுமி கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை அள்ளிவருகிறது.  
 

click me!