Uyir Thamizhukku: அமீர் ஹீரோவாக நடித்துள்ள 'உயிர் தமிழுக்கு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published : Apr 24, 2024, 10:13 PM IST
Uyir Thamizhukku: அமீர் ஹீரோவாக நடித்துள்ள 'உயிர் தமிழுக்கு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுருக்கம்

இயக்குனர் ஆதம்பாவா இயக்கத்தில் அமீர் நடித்துள்ள 'உயிர் தமிழுக்கு' திரைப்படம் மே 10-ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். 

இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது

‘உயிர் தமிழுக்கு’ பட வெளியீடு குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா கூறும்போது, “ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, இந்த வரவேற்பால் படத்தின் நாயகன் இயக்குநர் அமீருக்கும் எனக்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சி. மேலும் அமீர் படம் வந்து நீண்ட நாட்கள் ஆவதால் அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் சூட்டோடு சூட்டாக இப்படி ஒரு அரசியல் காதல் காமெடி படம் வெளியாவதால் நேரடியாக மக்களிடம் நூறு சதவீதம் கனெக்டாகும் என நினைக்கிறேன். 

இதுவரை பார்த்திராத ஒரு புது அமீரை ரசிகர்கள் இப்படத்தில் பார்க்கலாம். காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்து ஏரியாவிலும் ஒரு மாஸ் எண்டர்டைனராக அதகளப்படுத்தியிருக்கிறார். வித்யாசாகரின் இசையில் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து மில்லியன் கணக்கில் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு உயிர் தமிழுக்கு சரியான விருந்தாக இருக்கும் இது இயக்குநராக,தயாரிப்பாளராக என்னுடைய கேரண்டி” என நம்பிக்கையுடன் கூறினார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கி கல்லாகட்டிய டாப் 5 தமிழ் ஹீரோஸ்... ரஜினியை முந்திய அஜித்..!
மாஸ் ஸ்கெட்ச்! இனி தோல்வியே இல்லை! சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்டு உறுதி: அதிரடித் திட்டம் என்ன?