Priya Bhavani Shankar : "முருகா உனக்கு வந்த அதே சோதனை" அப்சட்டான பிரியா பவானி சங்கர் - வெளியிட்ட வீடியோ வைரல்!

By Ansgar R  |  First Published Jun 10, 2024, 7:42 PM IST

Actress Priya Bhavani Shankar : செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.


பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பிரியா பவானி சங்கர், சென்னையில் கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி பிறந்தவர். பி.டெக் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்ற பிரியா பவானி சங்கர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மேயாத மான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். 

தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான "கடைக்குட்டி சிங்கம்", "மான்ஸ்டர்" மற்றும் "மாபியா" போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் இவர் நடிப்பில் நான்கு திரைப்படங்கள் தமிழில் வெளியானது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் கடந்த 2023 ஆம் ஆண்டு தெலுங்கு உலகிலும் நடிக்க தொடங்கினார். 

Tap to resize

Latest Videos

undefined

Actor Karthi : மீணடும் ஒரு Gangster படமா? பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி - வெளியான தகவல் உண்மைதானா?

தற்பொழுது கமலின் "இந்தியன் 2" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இவருடைய நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் உருவாகி வரும் இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். 

"திருவிளையாடல்" திரைப்படத்தில் விநாயகருக்கு முக்கியத்துவம் கொடுத்து முருகனுக்கு முன்னுரிமை கொடுக்காத நிலையில், முருக பெருமான் தனது தந்தை மற்றும் தாயிடம் கோபித்துக் கொண்டு அவருடைய வீட்டை விட்டு வெளியேறும் காட்சியை பதிவிட்டு, முருகனாகவே இருந்தாலும் வீட்டில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தால் இதுதான் நிலை போல, என்னைப்போல யாரெல்லாம் இந்த வேதனையை அனுபவித்து இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள், என தனது instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய ரசிகர்கள் பலரும் அதற்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரியா பவானி சங்கர் அண்மையில் தனது காதலருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றது குறிப்பிடத்தக்கது. 

Keerthy Suresh: அடேங்கப்பா... கீர்த்தி சுரேஷுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா?

click me!