
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இறுதியாக தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'காப்பான்' படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, லாக்கப், தலைவி, போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக கொச்சியில் உள்ள தனது வீட்டில் அம்மா ரவ்லாவுடன் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆசன வாயில் லத்தியை சொருகி... சாத்தான்குளம் கொடூரத்திற்கு எதிராக கொந்தளித்த திரைப்பிரபலங்கள்...!
இந்நிலையில் கடந்த 3ம் தேதி அன்று பூர்ணாவின் வீட்டிற்கு சென்ற ரபீக் உள்ளிட்ட சிலர், நகைக்கடை உரிமையாளர் என அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ரபீக் பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளனர். இதையடுத்து திருமண பேச்சு பேசுவது போல் வீட்டிற்குள் நுழைந்த நபர்கள் பூர்ணாவின் வீடு, கார் உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்துள்ளனர். இதையடுத்து தங்களுக்கு ஒரு லட்சம் பணம் வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூர்ணாவின் அம்மா, போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட நிறைய பெண்கள் அந்த கும்பல் மீது புகார் கொடுத்துள்ளனர். அதில் ஆலாப்புழாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவரும் அடக்கம்.
இதையும் படிங்க: கிறிஸ்துவ முறைப்படி கொண்டாட்டமாக நடந்து முடிந்த வனிதா திருமணம்... வைரலாகும் போட்டோஸ்...!
இதையடுத்து இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான பாலக்காட்டைச் சேர்ந்த ஷெரீஃப் என்ற நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த கும்பல் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அவர்களை கடத்தி மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றி பறிந்துவந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.