
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தன்னுடைய அடுத்த ரீ-என்ட்ரிக்கு பிள்ளையார் சுழி போட்ட, நடிகை வனிதா கடந்த 10 நாட்களுக்கு முன், பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், கூடவே இவர்களின் திருமண பத்திரிக்கை ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இது வதந்தியா என்கிற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், இது குறித்து விளக்கம் கொடுத்த நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை காதலிப்பது உண்மை தான் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த திருமணம் தன்னுடைய இரு மகள்களின், சம்மதத்துடன் தான் நடைபெற உள்ளதாகவும் வனிதா தெரிவித்தார். அதே சமயத்தில், வனிதாவின் மகள் தன்னுடைய அம்மாவிற்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட பதிவு அனைவரையுமே நெகிழ்ச்சியடைய செய்தது.
இந்நிலையில் வனிதா - பீட்டர் பால் திருமணமும், இன்று கிருஸ்துவ முறைப்படி, மிக எளிமையாக வீட்டிலேயே நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்ததலில் வைரலாக பரவ துவங்கியுள்ளது. இந்த திருமணத்தில், வனிதாவின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அதே போல் பீட்டர் பாலின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
வெள்ளை நிற திருமண கவுனில் தேவதை போல் வந்த வனிதாவை, கோர்ட் சூட்டுடன் காத்திருந்த பீட்டர் பால், உதட்டில் முத்தம்மிட்டு தன்னுடைய காதலை வெளிக்காட்டினார். பின்னர் கிருஸ்தவ முறைபடி மோதிரம் மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.