
இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் விவாகரத்து பெற்ற பின்னர் நடிகை அமலா பால் முழுக்க திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். ரத்னகுமாரின் ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மீண்டும் வலம் வர ஆரம்பித்துவிட்டார். முழுக்க ஹீரோயினை மையமாக கொண்ட அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து முடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆடுஜீவிதம், கேடவர், லஸ்ட் ஸ்டோரீஸ் ஆகிய படங்களும் அமலா பாலின் கைவசம் உள்ளது.
இதையும் படிங்க: பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!
இடையில் மும்பையைச் சேர்ந்த பாடகரான பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின, அதில் அமலா பால், பவ்னிந்தருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அந்த புகைப்படங்களை பாடகர் பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நொடியில் இருந்தே சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தது.
இதையும் படிங்க: ஆசன வாயில் லத்தியை சொருகி... சாத்தான்குளம் கொடூரத்திற்கு எதிராக கொந்தளித்த திரைப்பிரபலங்கள்...!
இதையடுத்து அந்த புகைப்படங்கள் நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டது என்றும், அமலா பால் இப்போதைக்கு இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இல்லை என்பதும் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் உள்ள அம்மாவுடன் தங்கியுள்ள அமலா பால் நாள்தோறும் கலக்கலான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும் தனது நண்பர்களுடன் ஜாலியாக பொழுது போக்குகிறார். இரண்டு ஆண் நண்பர்களுக்கிடையே கேரளா ஸ்டைல் வேட்டி, சட்டையில் கெத்தாக நின்று போஸ் கொடுத்த சோசியல் மீடியாவை கலங்கடித்தார்.
இதையும் படிங்க: கிறிஸ்துவ முறைப்படி கொண்டாட்டமாக நடந்து முடிந்த வனிதா திருமணம்... வைரலாகும் போட்டோஸ்...!
சமீபத்தில் ஆண் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அமலா பால், அவருடைய மொட்டை தலையில் முத்தம் கொடுத்த போட்டோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இப்படி அடுத்தடுத்து எதையாவது செய்து அமலா பால் ஹாட் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துவிடுகிறார். இந்நிலையில் தன்னுடன் போட்டோ எடுக்க வந்த ரசிகரின் கன்னத்தில் அமலா பால் நச்சென முத்தமிடும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
"
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.