"அவரை முழுசா நம்பினேன்"... "மற்ற நடிகைகளுக்காக என்னை ஏமாற்றிவிட்டார்"... பிரபல நடிகையின் பகீர் குற்றச்சாட்டு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 17, 2020, 12:01 PM IST
Highlights

சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ள மீரா வாசுதேவன், தன்னால் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க முடியாமல் போனதற்கு தனது மேனேஜர் தான் காரணம் என தெரிவித்துள்ளார். 

மும்பையில் பிறந்து வளர்ந்த மலையாள பெண் மீரா வாசுதேவன். "கோல்மால்" என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தமிழில் நடித்த "உன்னை சரணடைந்தேன்" திரைப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் மீரா வாசுதேவன் நடித்த 'அறிவுமணி', 'ஜெர்ரி', 'கத்தி கப்பல்' உள்ளிட்ட படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. 

அதன் பின்னர் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மூத்த மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்து கொண்ட மீரா, அவரிடம் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார். மீண்டும் அனிஷ் ஜான் கோகன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு, அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார். தற்போது மும்பையில் மகளுடன் வசித்து வருகிறார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான "அடங்கமறு" படத்தில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து வெயிட்டான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தீவிரமாக வாய்ப்பு தேடிவருகிறார். 

இதையும் படிங்க: காஞ்சிபுரம் போலீசாருடன் 'தல' அஜித்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் புகைப்படங்கள்....!

சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ள மீரா வாசுதேவன், தன்னால் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க முடியாமல் போனதற்கு தனது மேனேஜர் தான் காரணம் என தெரிவித்துள்ளார். "தன்மத்ரா" படம் ஹிட்டான போது எனக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. எனக்கு மொழி பிரச்சனை இருந்ததால், நான் எனது மேனேஜரை முழுமையாக நம்பினேன். அதுதான் நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு.

இதையும் படிங்க: கால் டாக்சியில் பயணித்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பகீர் அனுபவம்... டுவிட்டரில் அவரே பகிர்ந்த தகவல்...!

அவர் தனது தனிப்பட்ட விருப்பங்களுக்கு என்னை பயன்படுத்தி விட்டார். அவருடைய பேச்சைக் கேட்டு கதை கூட கேட்காமல் கால்ஷீட் கொடுத்த பல படங்கள் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் தான் அவர் எனக்கு வரும் நல்ல பட வாய்ப்புகளை மற்ற நடிகைகளுக்கு கொடுத்தார் என்பதை தெரிந்து கொண்டேன். நான் அப்போது மும்பையில் இருந்ததால் இது எதுவுமே எனக்கு தெரியாமல் போனது என்று தெரிவித்துள்ளார். 

click me!