பியூட்டி பார்லர் தோழியுடன் டூர் அடிக்கும் மீனா..! விதவிதமான உடையில் வேற லெவல் கொண்டாட்ட வீடியோ..!

Published : Sep 28, 2022, 01:24 PM IST
பியூட்டி பார்லர் தோழியுடன் டூர் அடிக்கும் மீனா..! விதவிதமான உடையில் வேற லெவல் கொண்டாட்ட வீடியோ..!

சுருக்கம்

நடிகை மீனா தன்னுடைய கணவரின் மறைவுக்குப் பின்னர், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். தற்போது தன்னுடைய தோழியுடன் இவர் டூருக்கு சென்றுள்ள வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.  

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சரத்குமார், விஜயகாந்த், என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் மீனா. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து, தமிழ்,மலையாளம், தெலுங்கு போன்ற  தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர்,  தன்னுடைய மகளையும் தமிழ் சினிமாவில் தன்னை போலவே குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.

அந்த வகையில், மீனாவின் மகள் நைனிகா தளபதி விஜய் உடன் 'தெறி' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் மழலை மொழி மாறாமல் நைனிகா நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து 'தெறி' பேபி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நைனிகாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் தற்போது வரை இருந்து வருகிறது.

மேலும் செய்திகள்: மர்மநபர்களால் தாக்கப்பட்ட நடிகர் விஷாலின் வீடு..! போலீசில் பரபரப்பு புகார்..!
 

இந்நிலையில், ஏற்கனவே நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த, மீனாவின் கணவர் வித்யா சாகர்... கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், நுரையீரல் தொற்று பிரச்சனை அதிகமானது. கொரோனா தொற்று குணமான போதிலும்... நுரையீரல் பிரச்சனை காரணமாக மீனாவின் கணவர் உயிரிழந்தார். 

மேலும் செய்திகள்: நடிகை கர்ப்பமான பின்னர் வைரலாகும் இந்து-முஸ்லீம் முறைப்படி நடந்த விஜய் டிவி சீரியல் நடிகரின் திருமண போட்டோஸ்!
 

இவரது இழப்பு நடிகை மீனாவை பெரிதும் பாதித்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே அடைந்தார். மேலும் கணவரின் மரணம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியானதற்கு சமூக வலைதளத்தின் மூலம் பதிலடிக்கும் கொடுத்தார். தற்போது மீனா மெல்ல மெல்ல தன்னுடைய தோழிகளின் உதவியோடு... மெல்ல மெல்ல கணவர் நினைப்பில் இருந்து மீண்டு வெளி உலகத்திற்கு வர துவங்கி உள்ளார். 

மேலும் செய்திகள்: அடேங்கப்பா... 170 ஆவது படத்திற்கு ரஜினிக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா?
 

ரம்பா, கலா மாஸ்டர், சினேகா, ப்ரீத்தா ஹரி, போன்ற இவருடைய சினிமா தோழிகள் பலரும் அவ்வபோது இவரை சந்தித்து மீனாவிற்கு ஆறுதலாக இருப்பது மட்டும் இன்றி, வெளியிடங்களுக்கும் அழைத்து வந்தனர். அந்த வகையில் தற்போது பிரபலங்களுக்கு மேக் அப் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் பிரபல பியூட்டி பார்லர் உரிமையாளர் ரேணுகா பிரவீன் உடன் மீனா டூருக்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் ஆட்டம், பாட்டம், என மகிழ்ச்சியாக இருக்கும் சில வீடியோக்களை வெளியிட அந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  ரசிகர்கள் பலரும் மீனாவின்  மாற்றத்தை வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்