மகனின் வளர்ச்சி பயணத்தை பதிவிட்ட எமி ஜாக்சன்..இவங்களும் குழந்தையாகவே மாறிட்டாங்களே

By Kanmani P  |  First Published Sep 28, 2022, 10:14 AM IST

எமி ஜாக்சன் அந்த வீடியோவில் தனது மகனுடன் குழந்தையாக மாறி விளையாடும் நடிகையின் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.


தமிழில் ஏ எல் விஜயின் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன்.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுசுடன் தங்க மகன், விஜயவுடன் தெறி, ரஜினிகாந்த் உடன் 2.0 என டாப் 10 நாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனால் இவர் குறித்தான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் இங்கும் வைரல் ஆவது வழக்கமாகிவிட்டது. வெளிநாட்டு நாயகிக்கே உரித்தான கடும் கவர்ச்சி காட்டி வரும் எமி ஜாக்சன் விக்ரமின் ஐ படத்தில் பிகினி உடையுடன் அனைத்து மொழி ரசிகர்களையும் வாய்ப்பு பிளக்க வைத்திருந்தார். அவரது நடிப்புத் திறனிலும் பாராட்டைப் பெற்றது.

இவர் தற்போது மீண்டும் ஏ எல் விஜயின் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளார். இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த தொழிலதிபரான ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பிரம்மாண்ட பார்ட்டியின் மூலம் தெரிவித்திருந்தனர்.  தனது குழந்தை பிறந்த பிறகு இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர் இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  கடந்த ஆண்டு காதலை விட்டு பிரிவதாக தடாலடி பதிவை வெளியிட்டு இருந்தார் எமி ஜாக்சன்.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் செய்திகளுக்கு... கோட்டு சூட்டில் கெத்துக்காட்டும் தமன்னா... ஹாட் போஸ்கள் இதோ

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

 

 இதன் பின்னர் சில மாதங்களிலேயே அடுத்த காதலனையும் தேர்ந்தெடுத்து விட்டார். காஸிப் கேர்ள் என்னும் படத்தின் மூலம் பிரபலமான நடிகர்  எட் வெஸ்ட்விக்கை  தற்போது காதலித்து வருகிறார். முன்னதாக இருவரும் ஜோடியாக இத்தாலி நாட்டிற்கு டேட்டிங் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட லிப்லாக் போஸ்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தது.

இந்நிலையில் தனது மகனுக்கு மூன்று வயது 9 மாதங்கள் ஆகி உள்ள விஷயத்தை அவனது ஒவ்வொரு வளர்ச்சி வீடியோவையும் இணைத்து குறிப்பிட்டுள்ளார் எமி ஜாக்சன். அந்த வீடியோவில் தனது மகனுடன் குழந்தையாக மாறி விளையாடும் நடிகையின் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு... தென்னிந்திய பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி காலமானார்..

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

click me!