
பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி இன்று இன்று காலை காலமானார். வயது மூப்பு காரணமாக பல நோய்களால் அவதிப்பட்டு வந்த இவர் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அசிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இந்திரா தேவியின் உடல் இறுதி சடங்கிற்காக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பத்மாலயா ஸ்டுடியோவில் வைக்கப்படும் என தகவல் தெரிவிக்கிறது. பின்னர் புதன்கிழமை மதியம் ஒரு மணிக்கு மகாபிரஸ்தானத்தில் இவரது இறுதி சடங்கு நடைபெற உள்ளது. பலம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ்பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி காலமாகியுள்ள செய்தியை மகேஷ்பாபுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்திரா தேவியின் மரணத்திற்கு மகேஷ்பாபுவின் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திரா அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும். அண்ணா மகேஷ் பாபு எப்போதும் உங்களுடன் இருக்கட்டும். ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார். அதேபோல மற்றுமொரு ரசிகர் இந்திரா தேவி அவர்கள் இன்று தனது கடைசி மூச்சை விட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. காட்டமனேனி குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...கடலுக்கு நடுவில் கட்டப்பட்ட ஊஞ்சலில்..ஒய்யாரமாய் படுத்துறங்கும் கவர்ச்சி புயல் ராய் லட்சுமி
இந்த ஆண்டில் மகேஷ்பாபு குடும்பத்தில் இது இரண்டாவது மரணமாகும். முன்னதாக மூத்த சகோதரர் ரமேஷ் பாபு வயது தொடர்பான நோய்களால் காலமானார். பலம்பெரும் நட்சத்திரம் கிருஷ்ணா மற்றும் இந்திரா தேவியின் ஐந்து குழந்தைகளில் மகேஷ் நான்காவது குழந்தை. மகேஷ் பாபுவுக்கு நம்ரதா ஷிரோத்கரை என்னும் மனைவியும், கவுதம் கட்டமனேனி, சித்தாரா கட்டமனேனி என இரு குழந்தைகள் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனே..பதற்றத்தில் ரசிகர்கள் !
சமீபத்தில் பிரபாஸின் மாமா கிருஷ்ணராஜூ கடந்து சில நாட்களுக்கு முன்னால் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் தென்னகச நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். இவர் 187 படங்களில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து தென்னிந்திய நட்சத்திரங்களிடம் இருந்து இது போன்ற செய்திகள் வந்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.