சமீபத்தில் கனிகாவின் பகிர்ந்திருந்த போஸ்ட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு காலத்தில் ரசிகர்கல் மத்தியில் பிரபல நடடிக்கையாக வலம் வந்தவர் கனிகா. அதோடு ஜெனிலியா, சதா உள்ளிட்டோருக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். \நடிகை கனிகா பாப் பாடகி மற்றும் லைடீ மியூஸ் நிகழ்ச்சிகளில் இடம்பெற்றதன் மூலம் தனது கலைத்துறை அறிமுகத்தை கொடுத்திருந்தார். பின்னர் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை அழகி போட்டியில் பங்கேற்ற கனிகா எந்த முன் அனுபவம் இன்றி அந்த போட்டியில் வெற்றி கண்டார். பின்னர் மணிரத்னத்தின் உருவாக்கமான 5 ஸ்டார் படத்தில் பிரசன்னாவுடன் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் அறிமுகமாகியிருந்த கனிகா வரலாறு படத்தில் மனநலம் குன்றிய பெண்ணாக வந்து தனது அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதோட ஆட்டோகிராப் படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இவர் அதே ரோலில் நடித்தார்.
மேலும் செய்திகளுக்கு...அடேங்கப்பா... 170 ஆவது படத்திற்கு ரஜினிக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா?
எதிரி, ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களோடு மலையாள படங்களில் அதிகமாக தோன்று இருந்த கனிகா கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்க பொறியாளர் ஆன ஷியாம் ராதாகிருஷ்ணனை மணந்தார் இவர் நடிகை ஜெயஸ்ரீயின் சகோதரன் ஆவார். அவர்களுக்கு 2010 ஆம் ஆண்டு சாய் ரிஷி என்ற மகன் பிறந்தார். பின்னர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய கனிகா, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதை தொடர்ந்து தற்போது சமீபத்தில் வெளியான கோப்ரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர், குறல், மின் நாட்குறிப்பு உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சான் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் நாடகத்தில் மூத்த மருமகளாக வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .
மேலும் செய்திகள்: மர்மநபர்களால் தாக்கப்பட்ட நடிகர் விஷாலின் வீடு..! போலீசில் பரபரப்பு புகார்..!
இந்நிலைகள் சமீபத்தில் அவர் பகிர்ந்திருந்த போஸ்ட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில் எனது மகன் பிறந்தவுடன் என்னிடம் காட்டப்படவில்லை பிறந்த உடனேயே அவனுக்கு இதய பிரச்சினை இருந்தது. அதனால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகனை பார்த்தவுடன் எனது மனம் இரண்டாக உடைந்து விட்டது. 7 மணி நேரம் ஆப்ரேஷன் செய்தனர். என் மகனை பிழைக்க வைத்து விட்டார்கள். மிகவும் கடுமையான தருணம். அதன் பிறகு என் மகன் நலமுடன் இருக்கிறான் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கனிகாவிற்கு ஆறுதல் கூறினார்.