'இந்தியன் 2' படத்திற்காக களரி பயிற்சியில் ஈடுபட்ட காஜல் அகர்வால்! உடலை வில்லாக வளைத்து மாஸ் காட்டும் வீடியோ!

By manimegalai a  |  First Published Sep 25, 2022, 1:08 PM IST

இந்தியன் 2 படத்திற்காக ஏற்கனவே குதிரை பயிற்சியில் ஈடுபட்ட நடிகை காஜல் அகர்வால் தற்போது களரி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 


'விக்ரம்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு, உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். லைகா மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையே பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக ஓராண்டுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆன நிலையில், தற்போது அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டு, மீண்டும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி வைரலானது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்ட படங்கள் இத்தனை இருக்கா...! தடைக்கான காரணம் என்ன?... முழு விவரம் இதோ
 

அதே போல் நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின் கர்ப்பமானதால் 'இந்தியன் 2' படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து காஜல் தரப்பில் இருந்தும், இந்தியன் 2 படக்குழு தரப்பில் இருந்தும் எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், குழந்தை பெற்ற பின்னர் மீண்டும் காஜல் அகர்வால் 'இந்தியன் 2' படத்திற்கு தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த படத்திற்காக குதிரை ஓட்டும்  பயிற்சி மேற்கொண்ட காஜல் தற்போது, களரி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்: முன்பு கருப்பு...தற்போது வெள்ளை..கலர் கலர் கவர்ச்சியில் கண்களை கலங்கடிக்கும் ரம்யா பாண்டியன்
 

இதுகுறித்த வீடியோவை  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது, களரிப்பயிற்சி  என்பது ஒரு பண்டைய இந்திய தற்காப்புக் கலையாகும், இது 'போர்க்களத்தின் கலை பயிற்சி' இந்த கலை வடிவத்தின் மந்திரம் ஷாலின், குங் ஃபூ மற்றும் அதன் விளைவாக கராத்தே மற்றும் டேக்வாண்டோ போன்ற கலைகள் பிறப்பிற்கு காரணமாக அமரித்தது. களரி பொதுவாக கொரில்லாப் போருக்குப் பயன்படுத்தப்பட்டது மற்றும் இந்த பயிற்சி கற்பவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்படுத்தும் ஒரு அழகான கலை. இதனை தனக்கு கற்றுக்கொடுப்பவருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: வாரிசுடன் மோத முடிவு செய்த துணிவு...பிரபல தயாரிப்பாளரின் ட்வீட்டால் பரபரப்பு
 

மேலும் செம்ம பிட்டாக மாறியுள்ள காஜல் அகர்வால், உடலை வில்லாக வளைத்து பயிற்சி மேற்கொள்கிறார். இந்த வீடியோ பார்பவர்களையே பிரமிக்க வைத்துள்ளது. இவர் இப்படி பல்வேறு பயிற்சி மேற்கொண்டு 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருவதால், கண்டிப்பாக இந்தியன் 2 திரைப்படம் காஜலுக்கு சிறந்த கம் பேக் திரைப்படமாக அமையும் என கூறப்படுகிறது. தற்போது மிகவும் பரபரப்பாக உருவாகி வரும் இந்த படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

தற்போது வெளியாகியுள்ள வீடியோ இதோ...
 

 

click me!