
சின்னத்திரை, வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் தீபா சங்கர், தற்போது தென் மாவட்ட பெண்களின் நிலை குறித்தும் ஆணாதிக்கம் மனநிலை கொண்ட ஆண்கள் குறித்து ஆவேசமாக பேசி உள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் “ நான் தென் மாவட்ட பெண்களுக்காக பேச வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கு சிறு வயதில் இருந்தே பல கதைகளை சொல்லி வளர்க்கின்றனர். உன் புருஷன் இன்னொருத்தி வீட்டுக்கு போனாலும் அவனை நீ கேள்விக்கேட்க கூடாது. அவனுக்கு தொண்டுகளை மட்டுமே செய்ய வேண்டும்.
இல்லன்னா இந்த சமுதாயம் உன்னை தவறாக பேசும். நீ பத்தினி இல்லை என்று பேசுவார்கள் என்று சொல்கிறார்கள். இதைவிட கேவலம் என்னனா சாப்பாடு விஷயத்தில் கூட பாரபட்சம் காட்டுகின்றனர். நீ பொம்பள புள்ள கொஞ்சமா தான சாப்பிடனும். அவன் ஆம்பள புள்ள அவனுக்கு அதிகமா வை என்று அதட்டி வளர்ப்பார்கள். நம்மை அடித்து துன்புறுத்தும் கணவனை திருத்தி விடலாம் என்று பல பெண்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால் திருந்தாத ஜென்மங்களை என்ன செய்ய முடியும். இதனால் பாதிக்கப்படுவது பெண்களின் வாழ்க்கையும் சந்தோஷமும் தான்.
எங்க சந்தோஷத்துக்காக நாங்க வாழணும்னு ஆசைப்படக்கூடாதா? அப்படி ஆசைப்பட்டோம்னா அவ்வளவு தான். எங்களுக்கு ஒரு பட்டம் கட்டி ஒதுக்கி வச்சுருவாங்க.. எங்களை ஒருத்தன் ஏமாதிட்டு போயிட்டானா கூட அவன் வருவான்னு வருவான்னு காத்திருக்க வேண்டும். நாங்க மனுஷங்க இல்லயா? எங்களுக்கு உணர்வுகள் இருக்காதா? ஆம்பளைங்களுக்கு மட்டும் எல்லாம் இருக்குமா?
அவங்களுக்கு மட்டும் செக்ஸுவல் ஆசை இருக்குமா? எங்களுக்கெல்லாம் இருகக்காதா? என் புருஷன் என்னிடம் மனசு விட்டு பேசணும்னு ஆசை இருக்காதா? அடி, மிதி, ஏன் புருஷன் கடித்து வைத்தால் கூட அதை வெளியே சொல்லக்கூடாது. வெளியே சொன்னால், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றால் குடும்ப மானம் போயிடும்னு அடிமைப்படுத்தி வைக்கிறது. ஹைகிளாஸ் பொண்ணுங்களுக்காக இதை நான் பேசல. என்ன மாதிரி நடுத்தர வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கவங்களுக்காக தான் பேசுறேன்.
விபத்தில் கணவன் இறந்துவிட்டால் அந்த பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணா என்ன தப்பு? ஆனா அந்த பெண்ணுக்கு கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு வீட்ல அடைச்சு வைக்கிறது. அந்த பொண்ணு யாரு கூடயாவது பேசுனா கூட பெருசா பேசுறது. ஏன் அவர்கள் அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தானே. ஏன் அதை செய்ய மாட்டேங்குறீங்க..
நாங்க தாசின்னே வச்சிக்கிடுவோம். எங்களை அப்படி மாற்றிய நீங்க யாரு? நாங்க தாசியே ஆனாலும் நடித்து என் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறேன். உங்களை போல் குடித்துவிட்டு ஊரை அழிக்கவில்லையே.. யார் குடும்பத்தை கவனிக்கவில்லையோ, எவன் பெண்களை இந்த நிலைக்கு தள்ளுகிறானோ அவனை பற்றி தான் பேசுகிறேன். இவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை.
பெண்கள் என்றால் இளக்காரமாக போய்விட்டதா? வேலைக்கு போகணும். குழந்தைகளை பாத்துக்கணும். ஒரு பொண்ணுக்கு எப்ப வேணும்னாலும் ஒரு பையன் மேல் காதல் வரலாம். அது தப்பே இல்லை. எனக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் இடையேயான விஷயம். அதை வைத்து என்னுடைய கேரக்டரை நீ எப்படி தீர்மானிக்க முடியும்.. இது தப்பான விஷயம்.. உங்களுக்கு என்னை பிடித்தால் அது காதல், ஆனால் உங்களை எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால் அது வேறையா?” என்று சரமாரியாக பல கேள்விகளை எழுப்பி உள்ளார் நடிகை தீபா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.