இன்ஸ்டா ரீல்ஸில் டிரெண்டான பெட்ரோல் பங்க் ஊழியரின் வீடியோ பார்த்து எமோஷனல் ஆன பாலா அந்த இளைஞருக்கு பைக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் பாலா. இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அதில் தன்னுடைய சரவெடியான காமெடிகளால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாவுக்கு பட வாய்ப்புகளும் படிப்படியாக கிடைக்க தொடங்கின. தற்போது தொகுப்பாளராகவும் கலக்கி வருகிறார் பாலா.
சின்னத்திரையில் பிசியாக வலம் வரும் அவர், அதில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்கிறார். மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ செலவுக்கு உதவி செய்வது, ஏழைகளுக்கு பைக் வாங்கி கொடுப்பது என பாரி வள்ளலாக திகழ்ந்து வருகிறார் பாலா. அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... குட் நைட் பட நடிகைக்கு ரகசியக் கல்யாணம்! ஜோடியாக போட்டோ வெளியீட்ட மீதா ரகுநாத்!
இந்த நிலையில், அண்மையில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்று டிரெண்ட் ஆனது. அந்த ரீல்ஸில், பைக்கர் ஒருவர் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றபோது, அங்கு வேலை பார்க்கும் இளைஞர், அந்த பைக் ஓனரிடம் இந்த கேமரா எவ்வளவு என கேட்க, அவர் 43 ஆயிரம் என சொல்கிறார். உடனே அந்த இளைஞர் சிரித்தபடி, நான் என் வீட்ல பைக் வாங்க 10 ஆயிரம் காசு கேட்டாலே செருப்பால அடிப்பேனு சொல்றாங்க என தன் வறுமையை வலிகள் நிறைந்த சிரிப்புடன் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த ரீல்ஸை பார்த்து எமோஷனல் ஆன பாலா, அந்த இளைஞரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, பைக் ஒன்றை வாங்கிக் கொண்டு அந்த பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட செல்வது போல் சென்று, அந்த இளைஞருக்கு பைக்கை பரிசாக வழங்கி இருக்கிறார். இதனால் இன்ப அதிர்ச்சியில் திளைத்து போன அந்த இளைஞர், பாலாவை கட்டிப் பிடித்து கண்கலங்கியபடி நன்றி தெரிவித்ததோடு, அவருடன் பைக்கில் ஒரு ரைடும் சென்றிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... மூன்று ரோலில் கலக்கிய ஹீரோஸ்.. கோலிவுட்டில் மெகா ஹிட் அடித்த 5 படங்கள் - ஆஸ்கார் வரை சென்ற "தெய்வமகன்"!