கர்ப்பமாக இருக்கும் நிலையில் குட்டை டவுசரில் பாறை மீது அமர்ந்து யோகா செய்யும் அமலா பால்! வைரலாகும் வீடியோ.!

Published : Jan 28, 2024, 04:06 PM IST
கர்ப்பமாக இருக்கும் நிலையில் குட்டை டவுசரில் பாறை மீது அமர்ந்து யோகா செய்யும் அமலா பால்! வைரலாகும் வீடியோ.!

சுருக்கம்

நடிகை அமலா பால், மருத்துவரின் அறிவுரை படி அமைந்து யோகா செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

மலையாள நடிகையான அமலா பால், மைனா படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக மாறினார். பின்னர் ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், சமீப காலமாக பட வாய்ப்புகள் சரிவர அமையாமல் தவித்து வந்த நிலையில்... பட தயாரிப்பிலும் இறங்கினார்.

ஏற்கனவே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற அமலா பால், விவாகரத்து பெற்று 5 வருடங்களுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். இதை தொடர்ந்து, சமீபத்தில்... ஜகத் தேசாய் என்பவரின் காதலை ஏற்று கொண்டு, ஒரே வாரத்தில் அவரை அவசர அவசரமாக திருமணமும் செய்து கொண்டார்.

விவாகரத்தான ஒரே வருடத்தில் மறுமணம் செய்யபோவதை உறுதி செய்த மெகா ஸ்டார் மகள் நிஹாரிகா! திருமணம் எப்போது?

திருமணமான ஒரே மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்த அமலா பால், தற்போது 5 மாதம் கர்ப்பமான இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததால் தான் அவசர அவரசமாக திருமணம் செய்து கொண்டார் என்கிற தகவலும் வெளியானது. இந்நிலையில் அமலா பால் தன்னுடைய கர்ப்பகாலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது மருத்துவரின் அறிவுரை படி ஒரு பாறை மீது அமர்ந்து உடல்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஆபத்தாய் மாறிய அழகு! பிரபல பாடகியின் உயிரை பறித்த காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கர்ப்ப காலத்தில் இந்த மலசானா யோகம் செய்வதை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்வதாகவும் இது இடுப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு மந்திரம் போல் செயல்படுவதாக அமலாபால் கூறியுள்ளார். அதேபோல் நீண்ட கடற்கரையில் நடைபயிற்சி செய்வது, வெறுங்காலுடன் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது, கர்ப்ப குமட்டலுக்கு சிறந்த சிகிச்சையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனது கால்கள் மணலையும் உப்பு நீரையும் தொடும் போது அதை ஒரு அதிசய மருத்துவ குணமாக நான் பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த யோகாவை செய்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கதையை முடித்த விஜய் டிவி.! ஜீ தமிழுக்கு தாவிய ஹீரோ.. விரைவில் உதயமாகும் புதிய சீரியல்! ஹீரோயின் யார் தெரியுமா?

அதே போல் தனது கணவர் தனக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பதாகவும் என்னை மிகவும் நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன் என்றும் அந்த பதிவில் அமலா பால் கூறியுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!