மீண்டும் வெள்ளித்திரையை கலக்க வரும் "துல்கரின் நண்பர்" - 90ஸ் கிட்ஸ் மனம் கவரும் "மறக்குமா நெஞ்சம்" டீஸர் இதோ!

Ansgar R |  
Published : Jan 27, 2024, 09:36 PM IST
மீண்டும் வெள்ளித்திரையை கலக்க வரும் "துல்கரின் நண்பர்" - 90ஸ் கிட்ஸ் மனம் கவரும் "மறக்குமா நெஞ்சம்" டீஸர் இதோ!

சுருக்கம்

Marakkuma Nenjam Teaser : பிரபல சின்னத்திரை நடிகர்கள் ரக்ஷன் மற்றும் தீணா இணைந்து நடித்துள்ள மறக்குமா நெஞ்சம் என்ற படத்தின் டீசர் இப்பொது வெளியாகியுள்ளது.

சென்னையில் பிறந்து பிரபல தொழில்காட்சியில் தொகுப்பாளராக தனது கலை பயணத்தை தொடங்கியவர் தான் ரக்சன். அதன் பிறகு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் சீசன் 5ல் தொகுப்பாளராக களம் இறங்கி மக்கள் மனதில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார் அவர். அதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் மற்றும் ஏழாவது சீசனில் இவர்தான் தொகுப்பாளராக இருந்தார். 

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களிலும், நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்து மக்களின் மனங்களை கவர்ந்து வந்த ரக்சன் அவர்கள் கடந்த 2020 ஆண்டு வெளியான தேசிங்கு பெரியசாமியின் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்ற திரைப்படத்தில் துல்கர் அவர்களுடைய நண்பராக நடித்து மிகப் பெரிய புகழை பெற்றார். 

தங்க மீன்கள் முதல்... ப்ளூ ஸ்டார் வரை! 10 வருடங்களாக.. தொடர் வெற்றி படங்களில் நடித்து வரும் லிசி ஆண்டனி!

அதேபோல தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய "வேட்டையன்" திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரும் அவரது சக விஜய் டிவி தோழருமான கலக்கப்போவது யாரு புகழ் தீனா அவர்களும் இணைந்து "மறக்குமா நெஞ்சம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

முழுக்க முழுக்க 90ஸ் கிட்ஸ் மனதை கவரும்வண்ணம் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை Filia என்டர்டைன்மென்ட்டோடு இணைந்து குவியம் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை யோகேந்திரன் இயக்கியுள்ளார். சச்சின் வாரியர் இசையில் தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவர் இயக்குனர் மட்டுமல்ல.. டப்பிங், சிங்கிங் என்று கலக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - சில சுவாரசிய தகவல்கள்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!