
தமிழ் திரை உலகில் ஜூனியர் ஆர்டிஸ்டாக களம் இறங்கி, இன்று முன்னணி ஆக்சன் ஹீரோவாக மெல்ல மெல்ல மாறி வரும் நடிகர்கள் தான் சூரி. நல்ல பல திரைப்படங்களில் மிகப்பெரிய ஹீரோக்களோடு இணைந்து காமெடி நடிகராக கடந்த பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருந்த சூரி, 2023 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான "விடுதலை" திரைப்படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கினார்.
தற்பொழுது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் சூரி அவர்கள், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் "கருடன்" என்கின்ற திரைப்படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் முதல் பார்வை வீடியோவாக வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த டாப் 10 தென்னிந்திய படங்கள்.. லிஸ்டுல இத்தனை தமிழ் படங்கள் இருக்கா?
குறிப்பாக காமெடியனாக இருந்த சூரி இன்று ஒரு ஆக்சன் ஹீரோவாக மாறி உள்ளது குறித்து வெளியாகும் பல மீம்ஸ்களை நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த சூழலில் கருடன் திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை தற்பொழுது சூரி துவங்கியுள்ளார். படபிடிப்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக வலது கையில் கட்டோடு டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் நடிகர் சூரி.
அவர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கருடன் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களான சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.