தமிழ் சினிமாவில், இன்று தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை ஒரு, சக்ஸஸ் ஃபுல் கதாநாயகியாக பலருக்கும் தெரியும், அதே நேரத்தில் அவர் இந்த நிலையை அடைய பட்ட கஷ்டங்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இப்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், இன்று தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை ஒரு, சக்ஸஸ் ஃபுல் கதாநாயகியாக பலருக்கும் தெரியும், அதே நேரத்தில் அவர் இந்த நிலையை அடைய பட்ட கஷ்டங்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இப்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: எத்தனை கோடி கொடுத்தாலும் இதற்கு ஈடாகுமா? ராகவா லாரன்சுக்கு எதிர்பாராமல் கிடைத்த பரிசு! எமோஷனல் ட்விட்!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து, வெற்றி கொடி நாட்டிய ஹீரோயின்களில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை கடந்து தான் இவரால் இந்த இடத்தை பிடிக்க முடிந்தது.
கோலிவுட் திரையுலகில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ''அவர்களும் இவர்களும் ' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் கவனிக்கப்பட வில்லை என்றாலும், இந்த படத்தை தொடர்து வெளியான, 'பண்ணையாரும் பத்மினியும்', 'காக்கா முட்டை' போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்காமல், சம்பளம் குறைவாக கொடுத்தாலும், தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து, நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
மேலும் செய்திகள்: மழலை சிரிப்பில் மயக்கும் நடிகர் கார்த்தியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்! பர்த்டே ஸ்பெஷல் போட்டோஸ்
இவரை பற்றி தெரிந்த அளவிற்கு இவருடைய குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாது.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மணிகண்டன் என்கிற சகோதரர் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. காரணம் இவர் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை தவிர்த்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தார்களாம் அவர்கள் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: 'சந்திரமுகி 2 ' ஜோதிகாவுக்கு பதில் இவரா? கர்ப்பத்தால் விட்ட வாய்ப்பை இப்போது பிடிக்க பிளான் போடும் நடிகை!
ஆனால் அவர்கள் இருவருமே தற்போது உயிருடன் இல்லை. ஐஸ்வர்யா ராஜேஷின் மூத்த சகோதரர், காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாராம். மற்றொரு சகோதரர், விபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய குடும்ப கஷ்டத்தை எண்ணி, ஐஸ்வயா ராஜேஷ் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது சூப்பர் மார்க்கெட்டில், சாஸ் எப்படி இருக்கிறது என சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள் என ரோட்டில் நின்றவாறு கருத்து கேட்கும் பணியை செய்து அதன் மூலம் வரும் சம்பளத்தில் தன்னுடைய படிப்பு உள்ளிட்ட மற்ற செலவுகளுக்கு பயன்படுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்: பிரபல நடிகருடன் குழந்தை நட்சத்திரம்! 4 வருடத்தில் ஹீரோயின்! முதல் முறையாக குஷ்பு வெளியிட்ட அரிய புகைப்படம்!
இதை தொடர்ந்து, மெல்ல மெல்ல ஆங்கரில், சின்னத்திரை ஷோக்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.