நடிகர் விஜய்யின் மேனேஜர் திடீர் என நீக்கமா? வெளிவந்த உண்மை!

Published : Jun 07, 2020, 03:37 PM IST
நடிகர் விஜய்யின் மேனேஜர் திடீர் என நீக்கமா? வெளிவந்த உண்மை!

சுருக்கம்

கோலிவுட் திரையுலகில், அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவருடைய மேனேஜர் திடீர் என வேலையை விட்டு நீக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது குறித்த உண்மை தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

கோலிவுட் திரையுலகில், அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவருடைய மேனேஜர் திடீர் என வேலையை விட்டு நீக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது குறித்த உண்மை தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: மகள் செல்பி எடுக்க... காதலோடு கேக் ஊட்டிய கணவர்..! யாரும் இல்லாத இடத்தில் ரம்பா கொண்டாடிய பிறந்தநாள்! போட்டோஸ்
 

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது, 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொரோனா ஊரடங்கு உத்தரவு போடப்படுவதற்கு முன்பே முடிவடைந்து விட்டாலும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிச்சம் இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்ட போது, சமூக விலகலை கடைபிடித்து செய்ய கூடிய பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் தற்போது 'மாஸ்டர்' படத்தில் மிச்சம் இருந்த அணைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ரிலீசுக்கு தயாராக உள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதால், திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய அனுமதி அளிக்கப்படுமா என்பது சந்தேகமே. 

மேலும் செய்திகள்: தீயாய் பரவிய சிம்புவின் திருமணம் தகவல் உண்மையா? அறிக்கை வெளியிட்ட டி.ராஜேந்தர்!
 

ஒருவேளை கொரோனா பிரச்சனை முடிந்தாலும் உடனடியாக தியேட்டர்கள் திறக்கப்படுமா என்பதும் கேள்வி குறியாகவே உள்ளது. 

இந்நிலையில் கடந்த சில வருடங்கலாவே விஜய்யின் அணைத்து படங்களிலும் மேனேஜராக பணியாற்றி வரும் ஜெகதீஷ் என்பவருக்கும்,  தளபதி விஜய்க்கும் ஒரு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதானால் ஜெகதீஷ் திடீர் என வேலையில் இருந்து நீக்க பட்டதாகவும் தகவல் வெளியாகி கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்: படுக்கையறையில் படு மோசமான போஸ்..! மொத்த அழகில் இளசுகளை ஈர்த்து... பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே!
 

இதுகுறித்து, திரையுலகை சேர்ந்த சிலர் விசாரித்த போது... இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பதும், யாரோ சிலர் கொளுத்தி போட்ட இந்த தகவல்  முற்றிலும் பொய் என்பது தெரியவந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?