
வைகை புயல் வடிவேலு (Vadivelu) இயக்குனர் சுராஜ் (Director Suraj) இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' (Naai Sekar Returns) படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து நிலையில், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டதுமே மீண்டும் பழைய உச்சாகத்தோடு, வடிவேலு திரைப்படங்கள் நடிக்க தயாராகினார். அந்த வகையில் இவர் முதல் முதலாக நடிக்க கமிட் ஆன திரைப்படம், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'நாய் சேகர்' படத்தில் தான். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான போது, வடிவேலுவின் ரசிகர்கள் உச்சங்கத்திற்கு அளவே இல்லை என்று கூறலாம். இந்த படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் எப்போது வெளியாகும் என காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகள்: Raai Laxmi: படு மோசமான உடையில்.. தண்ணீர் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில் இருந்து டாப் அங்கிள் போஸ் கொடுத்த ராய்
மேலும் பல வருடங்களுக்கு பின்னர், வடிவேலு இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை 'நாய் சேகர்' படக்குழுவினருடன் தான் கொண்டாடி மகிழ்ந்தார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. மேலும் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பெயர் 'நாய் சேகர்' என்று கடந்த இரண்டு வருடங்களாகவே ஒரு தகவல், உலா வந்தாலும் இதனை படக்குழுவினர் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யாமல் இருந்த காரணத்தால் இந்த படத்தின் தலைப்பை நடிகர் சதீஷ் நடித்து வரும் படத்திற்கு முறையாக பதிவு செய்து வைக்கப்பட்டது.
மேலும் செய்திகள்: Actor Arjun: பிரபல இளம் நடிகையிடம் கும்மாங்குத்து வாங்கிய ஆக்ஷன் கிங் அர்ஜுன்! வைரலாகும் வீடியோ!
படத்தின் பெயருக்காக முட்டி மோதி பார்த்தும் தலைப்பு கிடைக்காததால்... பின்னர் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்று பெயர் வைத்து, அதனை ஃபர்ஸ்ட் லுக்குடன் அதிகார பூர்வமாக வெளியிட்டனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சற்று முன்னர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள்: Tamannaah Bhatia: வேற லெவல் ஃபேஷன்! உடலோடு ஒட்டி இருக்கும் சில்வர் நிற உடையில்... ஐயன் லேடியாக மாறிய தமன்னா!
இந்த மோஷன் போஸ்டர் பார்த்ததுமே ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது எனலாம்... சந்தோஷ் நாராயணனின் ரசிக்க வைக்கும் இசையில், புல்லட்டில் பறந்து வருகிறார் ரிட்டர்ன் வந்துள்ள நாய் சேகர். பச்சை நிற உடையில், முடியெல்லாம் பறந்து பார்க்கவே மிகவும் காமெடியாக இருக்கிறார் வடிவேலு. சிங்கிளாக வராமல் தன்னுடைய புல்லட்டில் மூன்று நாய்களையும் ஏற்றி வருவது இன்னும் சிறப்பு. இந்த மோஷன் போஸ்டர் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.