Simbu : முத்துவாக கெத்து காட்டும் சிம்பு... சர்ப்ரைஸ் பாடலுடன் கவனம் ஈர்க்கும் வெந்து தணிந்தது காடு கிளிம்ப்ஸ்

Ganesh A   | Asianet News
Published : Dec 10, 2021, 04:18 PM IST
Simbu : முத்துவாக கெத்து காட்டும் சிம்பு... சர்ப்ரைஸ் பாடலுடன் கவனம் ஈர்க்கும் வெந்து தணிந்தது காடு கிளிம்ப்ஸ்

சுருக்கம்

முத்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்புவின் பயணத்தை விவரிக்கும் விதமாக ‘வெந்து தணிந்தது காடு’ (Vendhu Thanindhathu Kaadu) படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அமைந்துள்ளது.

மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. கவுதம் மேனன் (Gautham Menon) இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் (AR Rahman) இசையமைக்கிறார். இப்படத்தின் சிம்புவுக்கு ஜோடியாக புதுமுக நடிகை காயடுலோஹர் நடிக்கிறார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

‘வெந்து தணிந்தது காடு’ (Vendhu Thanindhathu Kaadu) படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடந்த நிலையில், 3-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ள சிம்பு (simbu), தன்னுடைய பாணியில் இருந்து சற்று மாறி, மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் முத்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்புவின் பயணத்தை விவரிக்கும் விதமாக இந்த கிளிம்ப்ஸ் வீடியோ அமைந்துள்ளது.

மேலும் பின்னணியில் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் ஒலிக்கும் மறக்குமா நெஞ்சம் என்கிற பாடல் மனதை வருடும் விதமாக உள்ளது. சோகம், சிரிப்பு, ஆக்‌ஷன், எமோஷன் என அனைத்திலும் கெத்து காட்டி இருக்கிறார் சிம்பு. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தென்னிந்தியாவின் 'ராஜமாதா'; 40 ஆண்டுகால உழைப்பு; 200 கோடி சொத்து: ரம்யா கிருஷ்ணனின் அசுர வளர்ச்சி!
லாக்கப்பில் கார்த்திக்: துடி துடித்துப் போன ரேவதி: அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!