Actor Arjun: பிரபல இளம் நடிகையிடம் கும்மாங்குத்து வாங்கிய ஆக்ஷன் கிங் அர்ஜுன்! வைரலாகும் வீடியோ!

Published : Dec 10, 2021, 03:30 PM IST
Actor Arjun: பிரபல இளம் நடிகையிடம் கும்மாங்குத்து வாங்கிய ஆக்ஷன் கிங் அர்ஜுன்! வைரலாகும் வீடியோ!

சுருக்கம்

பிரபல நடிகர் அர்ஜுன் சர்ஜா, இளம் நடிகையிடம் செம்ம குத்து வாங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

பிரபல நடிகர் அர்ஜுன் சர்ஜா, இளம் நடிகையிடம் செம்ம குத்து வாங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டு விளங்கும் நடிகர்களில் ஒருவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவரது அதிரடி சண்டை காட்சியை பார்த்து ரசிப்பதற்கு தற்போது வரை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நடிப்பை தாண்டி, திரைப்படம் இயக்குவது, தயாரிப்பது, கதை எழுதுதல், மற்றும் பட விநியோகம் என திரைப்பட துறையின்ஆல்ரவுண்டர் என்றும் இவரை கூறலாம். அதே போல் சுமார் 5 திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

மேலும் நடிகர் வெள்ளித்திரையை தாண்டி தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சாகச நிகழ்ச்சியான 'சர்வைவர்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் உள்ளார். வெளியிடத்தில் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் போட்டியாளர்களுக்கு இவர் ஊக்கம் கொடுத்து, தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சிக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

என்னதான் சின்னத்திரை பக்கம் சென்று விட்டாலும், அவ்வப்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் மோகன் லாலுடன் நடித்து வெளியான 'மரைக்காயர்' படத்தில் அர்ஜுன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து தற்போது இரண்டு தமிழ் படங்கள் மற்றும் ஒரு மலையாள படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அப்படி தேர்வு செய்து நடித்து வரும் படங்களில் வேற லெவலுக்கு ஆக்ஷனிலும் தூள் கிளப்பி வருகிறார்.

ஆக்ஷனில் பின்னி பெடல் எடுக்கும் இவரையே... இளம் நடிகை ஒருவர் குத்து குத்துன்னு கும்மாங்குத்து குத்திய வீடியோ வைரலாகி வருகிறது. அவர் வேறு யாரும் இல்லை நடிகை நிக்கி கல்ராணி தான். அர்ஜுன் சிக்ஸ் போக்கில் நிக்கி கல்ராணி குத்த அவரோ கல் மாதிரி நிற்கிறார். பின்னர் நிக்கிக்காக வலிப்பது போன்று ஆக்ஷன் செய்யும் கியூட் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

"

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பிளாக நடந்த திருமணம்... பாடகர் வேடனின் மனதை கொள்ளையடித்த அந்த பெண் யார் தெரியுமா?
விஜயகாந்த் படத்தின் பாட்டை சுட்டு டியூன் போட்ட ரஹ்மான்?! நேரில் கூப்பிட்டு கேள்வி கேட்ட கவிஞர் வாலி.! என்ன நடந்தது தெரியுமா?