கன்னியாகுமரியில் பிறந்து தமிழ் திரை உலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்து இன்றளவும் சிறந்த நடிகராக விளங்கி வருபவர் தான் தலைவாசல் விஜய். குணச்சித்திரம், வில்லன் என்று எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கும் ஒரு ஒப்பற்ற கலைஞன்.
கடந்த 1992 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தலைவாசல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவருடைய இயற்பெயர் ஏ.ஆர் விஜயகுமார். தமிழ்மொழி மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் இவர் பல்வேறு நாடகங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு குரல் மூலமாகவும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முன்னணி நடிகர் பாபு ஆண்டனி கொதிக்க மன்னனாக நடித்திருந்தார், அவருக்கு அந்த திரைப்படத்தில் குரல் கொடுத்ததும் தலைவாசல் விஜய் தான்.
undefined
தமிழ் திரை உலகில் கிட்டத்தட்ட 31 ஆண்டுகளாக பல நூறு திரைப்படங்களில் நடித்து சிறந்த முறையில் பயணம் செய்து வருகிறார். பொதுவாக நடிகர்களுடைய பிள்ளைகள் நடிகர்களாவது இயல்புதான். ஆனால் தலைவாசல் விஜய் அவர்களுடைய மகள் நடிப்புத் துறையை தேர்ந்தெடுக்காமல், விளையாட்டு துறையை தேர்ந்தெடுத்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
நீச்சல் வீராங்கனை ஆகிய தலைவாசல் விஜய் அவர்களின் மூத்த மகள், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களின் வென்றுள்ளார். அண்மையில் நேபாள நாட்டின் தலைநகரான காட்மண்டுவில் நடந்த தெற்காசிய நீச்சல் போட்டியில் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தமிழக கிரிக்கெட் வீரரான அஜித் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
அதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு திருமணமும் நடந்து முடிந்தது. இந்நிலையில் ஜெயவீனா விஜய் அவர்களுடைய திருமணத்தில் நடந்த சில நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த வீடியோக்கள் இப்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனது தந்தையை பிரிய போகிறோம் என்று அறிந்த ஜெயவீனா, மாப்பிள்ளை தாலி கட்டும் தருணத்தில் கண்ணீர் மல்க அழுதார். இந்நிலையில் அதை பார்த்த நடிகர் தலைவாசல் விஜய் அவர்களும், கண்ணீர் விட்டு அழ தொடங்கினார். ஒரு நடிகனாக எந்த உயரத்திற்கு சென்றாலும் தனது குழந்தை வேறு வீட்டிற்கு செல்வதை எண்ணி ஒரு தந்தையாக அவர் கண்கலங்கியது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.