Chandramukhi 2 : சும்மா பிண்ணிடீங்க... 'சந்திரமுகி 2' படத்தை பார்த்து வியர்ந்து பாராட்டிய ரஜினிகாந்த்!

Published : Sep 29, 2023, 04:29 PM IST
Chandramukhi 2 : சும்மா பிண்ணிடீங்க... 'சந்திரமுகி 2' படத்தை பார்த்து வியர்ந்து பாராட்டிய ரஜினிகாந்த்!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'சந்திரமுகி 2' படத்தை பார்த்து விட்டு, இயக்குனர் பி.வாசு - ராகவா லாரன்ஸ் ஆகியோரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.   


லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் 'சந்திரமுகி 2'. இந்தத் திரைப்படத்தை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தார். இதனால் படக் குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Biggboss 7: ஆள விடுங்க.. நைசாக கழண்டு கொண்ட அப்பாஸ்! பிரபல ஹீரோவை தொக்காக தூக்கிய பிக்பாஸ்! அப்போ ரணகளம் தான்!

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் தயாராகி உலகம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'சந்திரமுகி 2' வெளியானது. இந்த திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது.‌ படத்தைப் பற்றிய நேர் நிலையான விமர்சனங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாவதால் படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. இதற்காக அவர்கள் முன் பதிவு செய்து படத்தை ரசிக்க காத்திருக்கிறார்கள்.‌

Vijay Antony: நிறைய காயம்... மரத்துப் போனதுபோல் மாறிவிட்டேன்! மகளின் இழப்பு குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்கும் வகையில் வடிவேலுவின் காமெடி, ராகவா லாரன்ஸின் நடிப்பு, சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கணா ரனாவத்தின் பேய் அவதாரம்... ஆகியவற்றால் 'சந்திரமுகி 2' படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தில் ராகவா லாரன்ஸின் வேட்டையன் கதாபாத்திரத்திற்கும் ரசிகர்களிடம் பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த 'சந்திரமுகி 2' திரைப்படத்தை பிரத்யேகமாக பார்வையிட்டு, பட குழுவினரை உற்சாகப்படுத்தும் வகையில் சும்மா பிண்ணிடீங்க என இயக்குனர் பி.வாசுவை வாழ்த்தியதோடு. பட குழுவினரையும் பாராட்டியுள்ளார்.மேலும் படம் நேற்று வெளியானதில் இருந்து ரசிகர்களிடமும் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக தற்போது இப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?