அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக... திருவண்ணாமலையில் வேண்டுதல் வைத்த தாடி பாலாஜி!

Published : Jun 14, 2023, 09:40 PM ISTUpdated : Jun 14, 2023, 09:43 PM IST
அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக... திருவண்ணாமலையில் வேண்டுதல் வைத்த தாடி பாலாஜி!

சுருக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நலம் தேறி வரவேண்டும் என திருவண்ணாமலையில் வேண்டுதல் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகர் தாடி பாலாஜி.  

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 18 மணி நேரம் வரை விசாரணை நடத்திய நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார்.  அவரது உடல் நிலையை தீவிரமாக மருத்துவர்கள் கவனித்து வரும் நிலையில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையை சி ஆர் பி எப் போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஃபேஸ்புக் லைவில் பேசிக்கொண்டிருக்கும் போதே..! தற்கொலைக்கு முயன்ற நடிகரால் பரபரப்பு..!

மேலும் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து, மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக் குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், இதனை தொடர்ந்து அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தற்போது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்...  அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலனுக்காக பிரபல நடிகர் தாடி பாலாஜி திருவண்ணாமலைக்கு சென்று தன்னுடைய வேண்டுதலை வைத்துள்ளார்.

சமந்தாவை தொடர்ந்து 'சீதா ராமம்' பட நடிகை மிருணாள் தாகூருடன் ரொமான்ஸ் பண்ண போகும் விஜய் தேவரகொண்டா!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது...  "அனைவருக்கும் வணக்கம், நான் தான் தாடி பாலாஜி பேசுகிறேன். இன்று காலையில் ஒரு விஷயத்தை கேள்விபட்டேன். உண்மையிலேயே மிகவும் மனம் கஷ்டமாக இருக்கிறது. மரியாதைக்குரிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கைது செய்யப்பட்டார் மற்றும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார் போன்ற சம்பவங்களை பார்த்தேன். இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். செந்தில் பாலாஜி அவர்கள் அரசியலை தாண்டி எனக்கு ஒரு சகோதரரை போன்றவர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு இப்படி ஒரு பிரச்சனை என நினைக்கும் போது, ஒரு சக மனிதனாக மனம் மிகவும் வருத்தம் அடைந்தது.

18 வயதில் காதல்! அந்த விஷயத்துக்கு ஓகே.. பட் இந்த இரண்டும் வேண்டாம்! காதலருக்கு கண்டீஷன் போட்ட பிரியா பவானி!

இப்போது என்னால் முடிந்த ஒரே விஷயம், அவர் பூரண குணமடைந்து வரவேண்டும் என்பதற்காக திருவண்ணாமலையில் உள்ள என்னுடைய குருநாதரான மூக்குப்பொடி சித்தரிடம் வேண்டுதல் வைப்பது தான். வேண்டுதல் வைத்துள்ளேன் நிச்சயம் அவர் விரைவில் குணமடைந்து வருவார். எல்லாரும் அவருக்காக வேண்டிக் கொள்ளுங்கள். எனக்கு பர்சனலாக அவரை மிகவும் பிடிக்கும் என தாடி பாலாஜி கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சமந்தாவின் ஹனிமூன் பிளான்: ராஜ் உடன் ரொமான்டிக் டிரிப் எங்கே?
ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!