சமந்தாவை தொடர்ந்து 'சீதா ராமம்' பட நடிகை மிருணாள் தாகூருடன் ரொமான்ஸ் பண்ண போகும் விஜய் தேவரகொண்டா!

By manimegalai a  |  First Published Jun 14, 2023, 4:58 PM IST

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூருடன், இணைந்து நடிக்கும் படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 


விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை மிருணாள் தாகூர் இணையும் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க உள்ளனர். மேலும், வாசு வர்மா இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக உள்ளார். ’கீதா கோவிந்தம்’, ’சர்க்காரு வாரிபட்டா’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் பரசுராம் மீண்டும் இணைந்திருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவர்கள் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக துவங்கியது.

Tap to resize

Latest Videos

18 வயதில் காதல்! அந்த விஷயத்துக்கு ஓகே.. பட் இந்த இரண்டும் வேண்டாம்! காதலருக்கு கண்டீஷன் போட்ட பிரியா பவானி!

தயாரிப்பாளர் ஷியாம் பிரசாத் ரெட்டி கிளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். கோவர்தன் ராவ் தேவரகொண்டா முதல் காட்சியை இயக்க, பிரபல பைனான்சியர் சத்தி ரங்கய்யா கேமராவில் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது ப்ரீ புரொடக்‌ஷன் நிலையில் உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ’சீதாராமம்’ படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகமாகி தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மிருணாள் தாக்கூர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் சிரிஷுடன் இந்த படத்தின் மூலம் முதன் முறையாக விஜய் தேவரகொண்டா கைகோர்த்துள்ளார். இது ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸின் 54வது தயாரிப்பு ஆகும். மேலும், மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் VD13 திரைப்படம் உருவாக இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. 

ஒன்ஸ் மோர்... கமல்ஹாசன் படத்தில் இணையும் மாஸ் நடிகர்? சுட சுட வெளியான தகவல்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடைசியாக வெளியான லிகர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், இதை தொடர்ந்து நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக தெலுங்கில் உருவாகி வரும் குஷி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!