‘ரீல் தோனி’ சுஷாந்த் சிங் நினைவு நாள்... 3 வருடமாகியும் மரணத்தில் நீடிக்கும் மர்மம் - காதலியின் எமோஷனல் வீடியோ

By Ganesh A  |  First Published Jun 14, 2023, 3:37 PM IST

சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தாங்கள் இருவரும் ஜோடியாக எடுத்த அன்சீன் வீடியோவை பகிர்ந்து என்றென்றும் காதலுடன் இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.


நடிகர் சுஷாந்த் சிங், கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‘காய் போ சே’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகனாக அறிமுகமானார். பின்னர் பிகே, எம்.எஸ்.தோனி தி அண்டோல்டு ஸ்டோரி, சிச்சோரே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களே வியந்து பார்க்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டார் நடிகர் சுஷாந்த். இவரது திரையுலக பயணம் குறுகிய காலமாக இருந்தாலும், அவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் விதமாக அமைந்திருந்தன. 

இப்படி ரசிகர்களின் பேவரை ஹீரோவாக இருந்து வந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மூன்று கடந்த 2020-ம் ஆண்டு காலமானார். அவர் மரணமடைந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிறது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பிரமாதமான படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வந்த சுஷாந்தின் இந்த திடீர் மரணம் ரசிகர்களையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியடைய செய்தது. 

Latest Videos

இதுகுறித்து பாந்த்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர். ஆனால் இது தற்கொலை இல்லை, கொலை என்றும் குடும்பத்தினர் புகார் அளித்தனர். சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரின் காதலி ரியா சக்ரவர்த்தி மீது பீகார் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து சுஷாந்த் கொலை வழக்கை சிபிஐ கையில் எடுத்தது. 

இதையும் படியுங்கள்... நயன்தாரா முதல் சமந்தா வரை... டாப் ஹீரோயினாக இருக்கும்போதே ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை குஜால் படுத்திய நடிகைகள்

சுஷாந்த் சிங் வழக்கு பல பரிமாணங்களில் விசாரிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அது போதைப்பொருள் வழக்க்காக மாறியது. இதில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். ரியா சக்ரவர்த்தி போதை மருந்துகளை வாங்கி சுஷாந்த் சிங்கிடம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் தான் உள்ளது. மூன்று ஆண்டுகள் ஆகியும் அவர் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை. 

சுஷாந்தின் நினைவு தினமான இன்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் குரல் கொடுத்து வருகின்றனர். சுஷாந்த் சிங் மரணத்திற்கு நீதி கோரி டுவிட்டரில் ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி தாங்கள் இருவரும் ஜோடியாக எடுத்த அன்சீன் வீடியோவை பகிர்ந்து என்றென்றும் காதலுடன் இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

's post remembering on his death anniversary 🙏 pic.twitter.com/rSkrI8CskD

— Abhay (@Ab_hai24)

இதையும் படியுங்கள்...   ஒன்ஸ் மோர்... கமல்ஹாசன் படத்தில் இணையும் மாஸ் நடிகர்? சுட சுட வெளியான தகவல்!
 

click me!