Etharkkum Thunindhavan: வேஷ்டியை மடித்து கட்டி மாஸ் ஆட்டம் போடும் சூர்யா! 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி!

By manimegalai aFirst Published Nov 19, 2021, 2:43 PM IST
Highlights

இயக்குனர் பாண்டிராஜ் (Pandiraj) இயக்கத்தில் சூர்யா நடித்து வரும், 'எதற்கும் துணிந்தவன்' (Etharkkum Thunindhavan) படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது மாஸ் டீஸருடன் வெளியிட்டுள்ளது படக்குழு.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும், 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது மாஸ் டீஸருடன் வெளியிட்டுள்ளது படக்குழு.

நடிகர் சூர்யா நடிப்பில், கடைசியாக  தீபாவளியை முன்னிட்டு வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

மண் மனம் மாறாத கிராமத்து கதைகளை இயக்கி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் பாண்டிராஜ், தற்போது "எதற்கும் துணிந்தவன்" என்கிற அதிரடி ஆக்ஷன் படத்தை கையில் எடுத்துள்ளார். இந்த  படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனை இயக்குனர் பாண்டிராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.

மேலும் செய்திகள்: Vivek Birthday Special: நடிகர் விவேக் பற்றி பலரும் அறிந்திடாத 8 அரிய தகவல்கள் இதோ..!

இந்த படம் குறித்து சமீபத்தில் வெளியான தகவலில் 'எதற்கும் துணிந்தவன்' கதையும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்படுவதாக சொல்லப்பப்படுகிறது. பொதுவாக சூர்யவின் 2டி தயரிப்பில்  உருவாகும் படங்கள் உண்மை சம்பவம் சார்ந்த கதைக்களமாகவே உள்ளது. அதோடு  பெண்களுக்கு முக்கியத்துவம் சார்ந்த கதைகளாகவும் இருந்து வருகிறது. இவர் நடித்து தயாரித்திருந்த சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் மக்கள் மத்தியில் பேசப்படும் படமாக மாறியதை தொடர்ந்து, இந்த வரிசையில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படமும் தமிழகத்தை உலுக்கிய பொள்ளாட்சி பாலியல் வழக்கு தொடர்பான கதை என தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இது வரை வெளியாகவில்லை.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் முதல் முறையாக நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய் நடிக்கிறார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: நிறைமாத கர்ப்பிணியாக தாமரை மேல் அமர்ந்து... வயிற்றை காட்டியபடி வித்தியாசமாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை நீலிமா!

 

இந்த படம் குறித்த முக்கிய தகவல் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்த நிலையில், சற்று முன்னர்... இந்த படத்தின் ரிலீஸ் தேதியோடு மாஸ் டீசர் ஒன்றையும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சூர்யா குதூகலமாக வேட்டியை மடித்து கட்டி ஆட்டம் போடும் காட்சிகள் இடம்பெற்றுள்ள. மேலும் உலகம் முழுவதும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

is releasing on Feb 4th, 2022! pic.twitter.com/hwuwEkX3Bm

— Sun Pictures (@sunpictures)

 

click me!