மழையால் சரிந்த பிரமாண்ட செட்! நூலிழையில் உயிர் தப்பிய படக்குழுவினர்... நெஞ்சை பதற வைத்த சம்பவம்!

By manimegalai aFirst Published Nov 18, 2021, 7:08 PM IST
Highlights

படத்தின் மிக முக்கியமான காட்சியை படமாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த குருகுலம் செட், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் முழுவதும் சேதமடைந்து கீழே சரிந்து விழுந்தது. இந்த விபத்து நிகழும் போது அந்த இடத்தில் படக்குழுவை சேர்ந்த ஐந்து பேர் இருந்துள்ளனர். விபத்து நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த ஐந்து பேரும் அங்கிருந்து வெளியேறியதால், நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

‘மரகத நாணயம்’ , ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’
படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை தற்போது இயக்குகிறார்.

வரலாற்று சம்பவத்தை மையப்படுத்திய சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் நகைச்சுவையாக, இப்படத்தை இயக்கி வரும் ஜி.வி.பெருமாள் வரதன், சில வரலாற்று காட்சிகளை படமாக்குவதற்காக செங்கல்பட்டு பகுதியில் பிரமாண்டமான அரங்குகள் சிலவற்றை அமைத்து, அதில் அக்காலத்து குருகுலம் போன்ற செட்டை பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான முறையில் உருவாக்கியுள்ளனர்.

படத்தின் மிக முக்கியமான காட்சியை படமாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த குருகுலம் செட், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் முழுவதும் சேதமடைந்து கீழே சரிந்து விழுந்தது. இந்த விபத்து நிகழும் போது அந்த இடத்தில் படக்குழுவை சேர்ந்த ஐந்து பேர் இருந்துள்ளனர். விபத்து நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த ஐந்து பேரும் அங்கிருந்து வெளியேறியதால், நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இது குறித்து கூறியுள்ளஇயக்குநர், “இந்த விபத்தால் எங்களுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், விபத்தில் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் இருந்தது பெரும் ஆறுதலாக இருக்கிறது. குறிப்பாக விபத்து நடக்கும் போது அங்கிருந்த படக்குழுவினர் நுலிழையில் உயிர் தப்பினார்கள். இதற்க்கு கடவுளுக்கு நன்றி. உற்சாகத்தோடு படப்பிடிப்பை தொடங்கிய எங்களுக்கு எதிர்பாராத இந்த விபத்து சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், இதில் இருந்து மீண்டு மீண்டும் படப்பிடிப்பை விரைவில் துவங்குவோம்.” என்று கூறியுள்ளார்.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்களையும், அடாவடித்தனத்தை வெளிக்காட்டும் கதாப்பாத்திரத்தில் நடித்த சுரேஷ் ரவி, இப்படத்தில் காவல்துறையின் பெருமையையும், அவர்களுடைய நேர்மையையும் வெளிக்காட்டும் கதாப்பாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷா கவுடா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், நிழல்கல் ரவி, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை - கோதண்டம், மீசை ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன்,  ஜே.எஸ்.கே கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார். மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, முனிராஜ் கலையை நிர்மாணிக்கிறார்.  நடன காட்சிகளை சந்தோஷ் வடிவமைக்கிறார். பல்லவ மன்னர்களில் முக்கியமானவரான நந்தி வர்மனைப் பற்றி இதுவரை சொல்லப்படாத ஒரு உண்மை தகவலை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!