
நடிகர் சிவக்குமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சூர்யா. இவர் வாரிசு நடிகர் என்பதால், படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிகவும் எளிதாக கிடைத்து விட்டாலும்... ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானது இவரது நடிப்பு. இப்படி பல விமர்சனங்களை கடந்து, தன்னுடைய திறமையால் தான், தேசிய விருது பெரும் அளவிற்கு வளர்ந்துள்ளார் சூர்யா.
நடிகர் என்பதை தாண்டி, தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் இணைந்து... 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம், பல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் வெளியான 'ஜெய்பீம்' படத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம், படிக்க முடியாத சூழ்நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு கல்வி வழங்கி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும், இந்த அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உதவி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: சல்லடை போன்ற சேலையில்... கட்டழகை காட்டி அக்கா ஜான்விக்கே டஃப் கொடுக்கும் குஷி கபூர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
மேலும் தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் சூர்யாவிற்கு, தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திரையுலகை சேர்ந்த ரசிகர்களும் உள்ளனர். இவருடைய படங்கள் மற்ற மொழிகளில் வெளியாகும் போது, அங்கும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து இவரின் படங்களை வரவேற்று வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: அசீமை அடிக்க செருப்பை கழட்டிய ஆயிஷா..! பிரச்சனையால் பற்றி எரியும் பிக்பாஸ் வீடு..!
இந்நிலையில் நடிகர் சூர்யா திடீர் என கர்நாடகாவை சேர்ந்த 500 ரசிகர்களை, பெங்களூரில் உள்ள கான்ராட் ஹோட்டலில் நடிகர் சூர்யா இன்று கர்நாடக ரசிகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஹோட்டலில் சுமார் 500 ரசிகர்களை சந்தித்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.