
கடந்த 1999 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "வாலி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் ஜோதிகா. அதற்கு முன்னதாக அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் "வாலி" படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகள் பல வழங்கப்பட்டது.
இதனை அடுத்து அதே 1999ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான "பூவெல்லாம் கேட்டுப்பார்" என்கின்ற திரைப்படத்தில் தான் முதன் முதலில் இணைந்து நடித்தனர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும். அந்த படத்தின் மூலம் அவர்கள் இருவருக்குள் காதல் மலர்ந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்காத ஜோதிகா 2010 ஆம் ஆண்டு பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு முதல் மீண்டும் அவர் திரைத்துறையில் முன்னணி கதாபாத்திரம் மட்டும் ஏற்று நடிக்க துவங்கியுள்ளார். 45 வயது நிரம்பிய நடிகை ஜோதிகா மிகவும் பிட்டாக இருக்க அவர் தினமும் உடற்பயிற்சி செய்வது தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.
அதே பல நடிகர் சூர்யாவும் ஒரு Fitness Freak, ஆகவே கணவன் மற்றும் மனைவி இணைந்து ஒன்றாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.