கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை வெள்ளம் சூழ்ந்து, தண்ணீர் உள்ளே வர துவங்கிவிட்டதால் நடிகர் ஸ்ரீமன் குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியேறு வேறு வீட்டுக்கு சென்றுள்ளார்.
தமிழக பகுதிகளில் பரவலாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் துவங்கும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதமே துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால், பள்ளி கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு.
அதே போல் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் 4 நாட்கள் தொடர் மழை பேய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இரண்டு நாட்கள் கொட்டி தீர்த்த மழைக்கே தற்போது சென்னையில் உள்ள பல இடங்கள்... வெள்ளத்தில் மிதக்க துவங்கி விட்டன.
ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட ஜூனியர் NTR-யின் 'தேவாரா'! எப்போது ரிலீஸ் தெரியுமா?
அதே நேரம் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு மழையால் ஏற்பட்ட வெல்ல நீரை வெளியேற்றும் பணியை செய்து வருகிறது. சென்னை கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலினியில் வசித்து வந்த நடிகர் ஸ்ரீமன் குடும்பத்தோடு வீட்டை காலி செய்து கொண்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இது குறித்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு ஸ்ரீமன் கொடுத்த பேட்டியில், "கோடம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டின் உள்ளே தண்ணீர் உள்ளே நுழைய துவங்கி விட்டதாகவும், இதன் காரணமாக எனக்கு இன்னொரு வீடு உள்ளதால் அந்த வீட்டிற்கு செல்கிறேன். அரசு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்திருந்தாலும், இன்னும் சரியான விதத்தில் கொண்டு சென்றிருந்தால் மழை நீர் தேங்கி நின்றிக்காது. அதேநேரம் வெள்ளத்தை அரசு சிறப்பாக கையாண்டு வருவதையும் பார்க்க முடிவதாக ஸ்ரீமன் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் படம் முதல்... தளபதிக்கு ஜோடியாகும் வாய்ப்பு வரை 5 படங்களை மிஸ் செய்த சாய் பல்லவி!
எனக்கு இங்கிருந்து செல்வதற்கு, இன்னொரு இடம் இருக்கிறது ஆனால் மற்றவர்களுக்கு இருக்குமா என்று தெரியாது. ஒரு வேலை மழை நீர் வடிவதற்கான முயற்சிகளை 100 சதவீதம் செய்து முடித்து, அதையே முறியடிக்கும் விதமாக மழை பெய்தால் நாம் எதுவுமே செய்ய முடியாது. கடலில் இருந்து தண்ணீர் வெளியே வந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது என கூறியுள்ளார்.