முன்னாள் மனைவி கொடுத்த அதிரடி புகார்; நடிகர் பாலா கைது

By Ganesh A  |  First Published Oct 14, 2024, 10:17 AM IST

Actor Bala Arrested : தன்னைப் பின்தொடர்ந்து துன்புறுத்தியதாக முன்னாள் மனைவி புகார் அளித்ததை அடுத்து, நடிகர் பாலாவை கடவந்திரா போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.


 முன்னாள் மனைவி அம்ருதா சுரேஷ் அளித்த புகாரின் பேரில், நடிகர் பாலாவை கடவந்திரா காவல்துறையினர் திங்கட்கிழமை (அக். 14) கைது செய்தனர். சமூக ஊடகங்களில் தனது முன்னாள் மனைவி அம்ருதாவையும் அவரது மகளையும் அவதூறாகப் பேசியதாக புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுவர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது முன்னாள் மனைவி அம்ருதாவை பாலா பின்தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், அவரது மகளைத் துன்புறுத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை எடப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் அவரை கைது செய்தனர், கடவந்திரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நடிகர் பாலாவை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக பாலாவின் மகள் சமூக ஊடகங்களில் அவரைக் கண்டித்துப் பேசியிருந்தார். பாலாவின் மேலாளர் ராஜேஷ் மற்றும் நண்பர் உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இயக்குனர் பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா, பாலாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் இசையமைப்பாளர் கோபி சுந்தரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

click me!