விளையாட்டு வினை ஆனது! பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை - முட்டி மோதும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டுக்குள் விளையாட்டாக சண்டை போட்ட சண்டை தற்போது வினையாக மாறியுள்ளது. இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 

Bigg boss tamil season 8 contestant fight mma

பிக்பாஸ் ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக, பிக்பாஸ் சீசன் 8, நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கியது. கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகிய நிலையில், தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முன்தினம், ஆண்கள் அணியினர் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்காக பிராங்க் செய்த நிலையில் அதை நிஜம் என நம்பி ஜாக்குலின் போன்றோர் சண்டையை தடுக்கிறேன் என சென்று மொக்கை வாங்கியது தான் மிச்சம்.

ஏற்கனவே ஏமாற்ற பட்ட கடுப்பில் இருந்த ஜாக்குலின் இதற்காக ஒரு ஆர்ப்பாட்டம் செய்து கன்டென்ட் கொடுக்க முயற்சித்த நிலையில், இந்த பிராங்க் தற்போது ஆண்கள் அணிக்குள்ளேயே புது பிரச்னையை தூண்டி விடியுள்ளது. இந்த பிரச்சனை துவங்க தூபம் போட்டது... வெறும் யாரும் அல்ல பிக்பாஸ் தான்.

Latest Videos

Bigg boss tamil season 8 contestant fight mma

சுச்சுவேஷன் தெரியாமல்.. சோக பாட்டை சிரித்து கொண்டே பாடிய SPB! எந்த பாடல் தெரியுமா?

கடந்த ஒரு வாரத்தில், பிக்பாஸ் வீட்டில் ரியலாக இருப்பது யார்? ஃபேக்காக இருப்பது யார்? என ஒரு டாஸ்க் நடக்கிறது. அப்போது பிராங்க் செய்தது குறித்த விவாதம் வருகையில், விஷால் தன்னுடைய கருத்தை முன்னின்று பேசியபோது... இதற்க்கு பதில் கொடுத்த ரவீந்தர், ஆம், இந்த prank செய்வதற்கான காரணம் ரஞ்சித் நாமினேஷன் செய்யப்பட்டு இருப்பதனால் தான் கூறினார். இதற்க்கு ரஞ்சித் என்?  பெயரை பயன்படுத்தி கேம் ஆடுகிறீர்கள் என சண்டைக்கு சீறியுள்ளது தான் ஹை லைட்.

தொடர்ந்து பேசிய ரவீந்தர், அந்த சமயத்தில் தர்ஷா மற்றும் தர்ஷிகா இருவரும் இணைந்து ஆடியாது தான் கேம் என ரவிந்தர் சொல்ல... இவர் இப்படி பேசுவார் என சற்றும் எதிர்பாராத இருவரும்,  இது பொய் என கூறுகிறார்கள். ரவீந்தர் பிசிக்கல் டாஸ்கில் பர்ஃபாம் செய்யாவிட்டாலும்.. வார்த்தை ஜாலத்தில் தன்னுடைய திறமையை தீயாக வெளிப்படுத்தி வருகிறார்.


 

of

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. @mynanduonline pic.twitter.com/Lgvr4TRXP8

— Vijay Television (@vijaytelevision)

 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image