
சூரி கோவில் கட்டுவதை விட, அன்னச்சத்திரம் கட்டுவதை விட, கல்வி கொடுப்பது மிகவும் முக்கியம் என 'விருமன்' இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார். இவரது பேச்சுக்கு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கோவிலை மட்டும் சுட்டி காட்டி பேசும் சூரி ஏன்? சர்ச்சையோ அல்லது மசூதியையோ குறிப்பிடவில்லை என்பதை முன்வைத்து அவரை விமர்சித்து வந்தனர். பிரபல திரைப்பட நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சூரிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
மேலும் செய்திகள்: நமக்கு சோறு தான் முக்கியம்... வெளிநாட்டில் வெரைட்டியாக வெளுத்து கட்டும் பிரியா பவானி ஷங்கர்! ரீசென்ட் போட்டோஸ்
சூரிக்கு எதிராக சிலர் ஆர்ப்பரித்த நிலையில், இயக்குனர் பேரரசு போன்ற பிரபலங்கள் சூரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தும் வந்தனர். இந்நிலையில் சூரி எதையும் மனதில் வைத்து பேசவில்லை. இந்த காலத்தில் கல்வி என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்து கூறும் விதமாகவே இப்படி பேசினார் என, அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர் அவரது நண்பர்கள். நடிகர் சூரி சுவாமி பக்திக்கும், ஆன்மீகத்திற்கும், எதிரானவர் அல்ல என்றும் அவர் கடவுள நம்பிக்கை மிக்கவர் அவருடைய குடும்பம் ஒரு சாமியாடும் குடும்பம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்: நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!
சூரியின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் ராசாக்கூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், நடிகர் நடிகர் சூரி பொதுமக்களுடன் இணைந்து ஊர் பெரியவர்கள் இளைஞர்களுடன் ஒயிலாட்டம் ஆடும் வீடியோவை அவரது சொந்த ஊர் காரர்கள், மற்றும் அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.