ஆறு வாரங்களில் 4 கிலோ எடையை குறைத்த ஜெனிலியா...கடின பயணத்தை வெளியிட்ட நாயகி!

Published : Aug 09, 2022, 07:04 PM IST
ஆறு வாரங்களில் 4 கிலோ எடையை குறைத்த ஜெனிலியா...கடின பயணத்தை வெளியிட்ட நாயகி!

சுருக்கம்

இந்த வீடியோவுடன் ஜெனிலியா, 'தனது பயணத்தை தொடங்கும் போது 59.4 கிலோவாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். 6 வாரங்கள் தீவிர உடற்பயிற்சி செய்த பின் இப்போது 55.1 கிலோவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

விஜயின் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட படங்களில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தவர் ஜெனிலியா.  தமிழ் தெலுங்கு என பிசியாக இருந்த ஜெனிலியா கடந்த 2012 ஆம் ஆண்டு ரித்தேஷ்தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வந்த ஜெனிலியா சமீபத்தில் ஹிந்தி மராத்தி, தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.  ஜெனிலியா தனது கணவர் உடன் அடிக்கடி வேடிக்கையான வீடியோக்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஜெனிலியா தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிந்துள்ளார்  வீடியோ பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதாவது தனது உடல் எடையை குறைத்தது குறித்தான அனுபவங்களை இன்ஸ்டா வாயிலாக பகிர்ந்துள்ளார் ஜெனிலியா.  அதில் ஆறு வாரங்களில் நான்கு கிலோ எடையை குறைத்த கதையை பகிர்ந்துள்ளார்.   தனது உடற்பயிற்சி பயணத்தை பற்றி ஒரு நீண்ட ஊக்கமளிக்கும் குறிப்பையும் எழுதி உள்ளார். அவர் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...வெளியானது விக்ரம் கோப்ரா நியூ ரிலீஸ் டேட்..எப்ப வெளியீடு தெரியுமா?

மேலும் செய்திகளுக்கு...பாரதியிடம் உண்மையை சொன்ன லட்சுமி... இன்றைய எபிசோட் இதோ !

வீடியோவில் ஜெனிலியா தனது ஜிம் பயிற்சியாளருடன் கடுமையான பயிற்சி பெறுகிறார். ஜான்  ஆபிரகாம் மற்றும் அவரது கணவர் ஆகியோருடன் காணப்படுகிறார். அவர்கள் இந்த செயல்முறையில் உதவுகிறார்கள். இந்த வீடியோவுடன் ஜெனிலியா,  'தனது பயணத்தை தொடங்கும் போது 59.4 கிலோவாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். 6 வாரங்கள் தீவிர உடற்பயிற்சி செய்த பின் இப்போது 55.1 கிலோவாக இருப்பதாகவும் கூறியுள்ள நடிகை, இது 59.4 கிலோவிலிருந்து 55.1 கிலோ வரை ஒரு சிறந்த பயணம். நான் நிறைய சந்தேகங்கள் நிறைய பாதுகாப்பின்மையுடன் தொடங்கினேன். ஆனால் இன்று இலக்கு எட்டுவதை தவிர நான் மிகவும் நம்பிக்கையுடனும் ஒழுக்கத்துடன் உணர்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் சோர்வடையாமல் இருக்க விரும்புகிறேன்.

மேலும் செய்திகளுக்கு... விஜயின் வாரிசு படத்தில் ஷ்யாமுக்கு என்ன ரோல் தெரியுமா?

மேலும் டயட் பற்றி நான் பேச வேண்டும் ஒவ்வொரு முறையும் என் அளவு அதிக எடையை காட்டும்போது குற்ற உணர்ச்சியால் உறைந்து போனேன். உடற் தகுதியில் எடை மட்டுமே முக்கியம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் முடிந்தவரை வெளிப்படை தன்மையுடன் இருக்கப் போகிறேன். நல்ல நாட்களைக் கொண்டு வருகிறேன். அவ்வளவு நல்ல நாட்களும் இல்லை. அதுவரை.. விரைவில் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார். இவரது வீடியோக்களுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Rajinikanth Net Worth : எளிமையின் சிகரம் ரஜினிகாந்த்... யம்மாடியோ இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?
50 ஆண்டு சாதனை.. பல தலைமுறைகளை கவர்ந்தவர்.. ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து