வெளியானது விக்ரம் கோப்ரா நியூ ரிலீஸ் டேட்..எப்ப வெளியீடு தெரியுமா?

Published : Aug 09, 2022, 06:04 PM IST
வெளியானது விக்ரம் கோப்ரா நியூ ரிலீஸ் டேட்..எப்ப வெளியீடு தெரியுமா?

சுருக்கம்

முன்னதாக ஆகஸ்ட் 11ஆம் தேதி கோப்ரா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பின் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 31-ல் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. 

விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் கோப்ரா என இரண்டு படங்களின் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் பிஎஸ் 1 ஆடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது. அதேபோல கோபுர படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு விக்ரம் மாசாக என்ட்ரி கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்ரமை கோப்ரா  ஆடியோ லாஞ்சில் கண்ட அவரது பேன்ஸ் குதூகலமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது கோபுர படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக்சன் திரில்லர் திரைப்படமான இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் கே எஸ் எஸ் லலித்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, பத்மபிரியா, முகமது  அலி பெய்க், கனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் மூலம் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் உள்ளிட்டோர் கோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கின்றனர். இவர்களுடன் மிர்னாளினி ரவி, மீனாட்சி மற்றும் கேஎஸ் ரவிக்குமார் துணை வேடங்களில் வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...பாரதியிடம் உண்மையை சொன்ன லட்சுமி... இன்றைய எபிசோட் இதோ !

கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பிற்கு வந்த இந்த படம் பலகட்ட ஒத்திவைப்பிற்கு பிறகு தற்போது திரைக்கு தயாராக உள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 11ஆம் தேதி கோப்ரா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பின் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 31-ல் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.  மாறுபட்ட தோற்றத்தில் விக்ரம் நடித்துள்ள இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. விக்ரம் இந்த படத்தில் மதியழகன், கோப்ரா, பிளாக் ஹோப்ரா என மூன்று வித்தியாசமான தோற்றங்களில் தோன்ற உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு... விஜயின் வாரிசு படத்தில் ஷ்யாமுக்கு என்ன ரோல் தெரியுமா?

 

 

கோப்ரா படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். இவர் முன்னதாக சியானின் புதிய மன்னர்கள், ராவணன், ஐ உள்ளிட்ட படங்களுக்கு கம்போஸ் செய்திருந்தார்.  கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி கோபுரா படத்திலிருந்து முதல் சிங்கிளாக தும்பி துள்ளல் வெளியாகி இருந்தது. பின்னர் அதிரா,  உயிர் உருகுதே உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி வைரலானது.  மீதமுள்ள பாடல்கள் கடந்த ஜூலை 11ஆம் தேதி பீனிக்ஸ் மாலில் நடைபெற்ற ஆடியோ  லான்ஞில் வெளியிடப்பட்டது. 

 மேலும் செய்திகளுக்கு... உதயநிதி ...அருள்நிதி இணையும் டைரி..எப்ப ரிலீஸ் தெரியுமா?

படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்  மூவிஸ் கைப்பற்றியுள்ளது. அதேபோல சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி பெற்றுள்ளது.  டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கை சோனி லைவ்  தன் வசப்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் களைகட்டிய சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் கொண்டாட்டம் - ரஜினியின் பர்த்டே கிளிக்ஸ் இதோ
கொளுத்திப்போட்ட அறிவுக்கரசி... ஜனனியின் பிசினஸுக்கு வேட்டு வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது