பாரதியிடம் உண்மையை சொன்ன லட்சுமி... இன்றைய எபிசோட் இதோ !

Published : Aug 09, 2022, 04:37 PM IST
பாரதியிடம் உண்மையை சொன்ன லட்சுமி... இன்றைய எபிசோட் இதோ !

சுருக்கம்

பாரதியிடம் நீங்கள் தான் என்னுடைய தந்தை அம்மாவும், பாட்டியும் சொல்லி விட்டார்கள் எனக் கூறி அழுகிறாள் லட்சுமி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் டென் சீரியலான பாரதி கண்ணம்மாவின் இன்றைய எபிசோடில் லட்சுமி தனது தந்தையை இவர் தான் என குறிப்பிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பாரதி கண்ணம்மா போன வார எபிசோடில் பாரதி வளர்க்கும்  ஹேமா குறித்த உண்மை தெரிய வந்தது. கண்ணம்மாவுக்கு பிறந்தது இரட்டைக் குழந்தைகள் என்பதில் தொடங்கிய அதில் ஹேமாவை சௌந்தர்யா தூக்கி வந்தது வரை கண்ணம்மா பொது இடத்தில் தெரிவித்திருந்தார். இதனால் உடைந்து போன பாரதி, 'ஹேமாவை தன்னிடம் இருந்து பிரித்தால் தான் உயிருடனே இருக்க மாட்டேன் என குடும்பத்தினர் மிரட்டி இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு... விஜயின் வாரிசு படத்தில் ஷ்யாமுக்கு என்ன ரோல் தெரியுமா?

இந்த வார எபிசோடில் ஹேமாவும், லட்சுமியும் படிக்கும் பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடைபெறுகிறது. இதில் கண்ணம்மா தான் கலந்து கொள்ள இயலாது என போன எபிசோடிலேயே கண்டிப்பாக தெரிவித்து இருந்தார். ஆனால்  ஹேமாவிற்காக பாரதி பள்ளிக்கு வருகை  தருகிறார். கண்ணம்மா நீண்ட நேரமாகியும் பள்ளி வராததால் பாரதி ஆசிரியருடன் பேசிக்கொண்டு இருப்பதை கண்ட லட்சுமி அவரிடம் சென்று சென்று சிறிது நேரம் தனக்கு தந்தையாக நடிக்குமாறு கேட்கிறார். ஆனால் பாரதியோ அவ்வாறு செய்ய இயலாது என கோவமாக தெரிவிக்கிறார்.

 மேலும் செய்திகளுக்கு... உதயநிதி ...அருள்நிதி இணையும் டைரி..எப்ப ரிலீஸ் தெரியுமா?

இதனால் நொந்து போன லட்சுமி, 'நீங்கள் தான் என்னுடைய தந்தை அம்மாவும், பாட்டியும் சொல்லி விட்டார்கள் எனக் கூறி அழுகிறாள். இதனை கேட்ட பாரதி அதிர்ச்சி அடைகிறார். இருந்தும் குழந்தை இடம் தன் கோபத்தை காட்ட இயலாமல் அங்கிருந்து வேகமாக புறப்படுகிறார்.  லட்சுமி பாரதி பின்னால் சென்று கெஞ்சுகிறார். ஆனால் பாரதி மனமிரங்குவதாக தெரியவில்லை. இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரோரா போட்ட கேஸில் ஆடிப்போன பாரு ! அடித்து ஓட விட்ட விக்ரம்!
சூப்பர்ஸ்டாரின் டைம்லெஸ் மாஸ் மூவீஸ் : மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 10 ரஜினி படங்கள்