Simbu Viral Video : பிரபல நடிகர் சிம்பு இப்பொது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பரபரப்பாக நடித்து வருகின்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது.
சிறுவயது முதலிலேயே தமிழ் சினிமாவில் நடித்து வரும் பிரபல நடிகர் சிம்பு அவர்கள், குழந்தை நட்சத்திரமாகவே பல திரைப்படங்களில் நடித்த நிலையில் அதன் பிறகு கதையின் நாயகனாக நடிக்க துவங்கினார். இப்பொழுது தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாகவும், சிறந்த இயக்குனராகவும் விளங்கிவரும் சிம்பு அவர்கள், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
முற்றிலும் மாறுபட்ட இரு வெவ்வேறு வேடங்களில் நடிகர் சிம்பு இந்த திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், அதிலும் குறிப்பாக சிம்பு ஏற்று நடக்கவிருக்கும் இரு கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரம், ஒரு திருநங்கையினுடைய கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு போர் வீரர்கள் சூழ்ந்த ஒரு களத்தின் நடுவே சிம்பு அவர்கள் நடந்து வருவது போல ஒரு வீடியோவை அவரே வெளியிட்டார்.
இது நிச்சயம் அவருடைய 48வது திரைப்படத்திற்கான ஒரு முன்னோட்ட காட்சிகள் தான் என்று அவருடைய ரசிகர்கள் பெரிய அளவில் அதை வைரலாக்கி வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அவர் புதிதாக நடித்திருக்கும் ஒரு விளம்பரப் படத்தின் வீடியோ தான் அது என்று தனது ட்விட்டர் பக்கம் மூலம் அவர் தற்பொழுது தெரிவித்துள்ளார்.
காசா கிராண்ட் நிறுவனம் சன்சிட்டி என்கின்ற ஒரு புது விஷயத்தை தற்போது லான்ச் செய்ய உள்ள நிலையில் காசா கிராண்ட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக சிலம்பரசன் மாறியுள்ளார். சென்னையில் அவர்கள் புதிதாக கட்டிருக்கும் இந்த டவுன்ஷிபிற்கான விளம்பரம் தான் அது என்று தற்பொழுது தனது எக்ஸ் பக்க பதிவில் தெரிவித்திருக்கிறார் நடிகர் சிம்பு.