பத்திரப்பதிவு அலுவலகம்.. புதிய நிலத்தை பதிவு செய்ய சென்ற நடிகர் ரஜினிகாந்த் - அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்!

Ansgar R |  
Published : Feb 29, 2024, 09:10 PM IST
பத்திரப்பதிவு அலுவலகம்.. புதிய நிலத்தை பதிவு செய்ய சென்ற நடிகர் ரஜினிகாந்த் - அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்!

சுருக்கம்

Super Star Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று திருப்போரூர் பத்திர பதிவு அலுவலகம் சென்றபோது அங்கு அவரை காண ரசிகர்கள் கூட்டம் கூடியது.

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் மாபெரும் கலைஞர் நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இறுதியாக தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான "லால் சலாம்" திரைப்படத்தில் நடித்திருந்த ரஜினிகாந்த் அவர்கள் அதற்கு முன்னதாக பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் "ஜெயிலர்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 

அந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவருடைய இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்தவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், அதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது திரைப்படத்தின் நடிக்கவுள்ளார்.

செய்தியாளர் மீது தாக்குதல்.. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யகோரி பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம்!

அதனை தொடர்ந்து 172 திரைப்படத்தில் மீண்டும் நெல்சன் திலீப் குமாருடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையை அருகில் உள்ள நாவலூர் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் புதிதாக இடம் ஒன்று வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த இடத்திற்கான பத்திரப்பதிவு செய்யும் பணிகளை மேற்கொள்ள அவர் இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அவர் அங்கு வரும் செய்தி அறிந்த அவருடைய ரசிகர்கள் அங்கு பெரும் திரளாக கூடிய நிலையில், காரில் ஏறி புறப்படும் முன்பாக தன்னை காண வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கையசைத்து சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

என்றும் குறையாத ஸ்டைல்.. 40 ஆண்டுகள் கழித்து அதே பைக்கில் சூப்பர் ஸ்டார் - மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஏவிஎம்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!