லேட்டா கிடைச்சாலும் .. பெஸ்டா கிடைத்தது..விருது குறித்து சித்தார்த் உருக்கம்

Published : Sep 05, 2022, 01:55 PM ISTUpdated : Sep 05, 2022, 09:30 PM IST
லேட்டா கிடைச்சாலும் .. பெஸ்டா கிடைத்தது..விருது குறித்து சித்தார்த் உருக்கம்

சுருக்கம்

கவியத்தலைவன் கடந்த 2014 -ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ரிலீசாகும் சிறந்த படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் விருது  ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட இவ்விழா,சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது.  

இந்த விழாவில் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. நேற்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விருது விழா திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.  இதில் திரைப்பட மற்றும்  செய்து துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அறநிலைய துறை பி. கே. சேகர்பாபு, சென்னை மேயர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது வழங்கினார்.

மேலும் செய்திகளுக்கு...  அடுத்தடுத்து வெளியாகும் பொன்னியின் செல்வன் அப்டேட்டுகள்...ஜடாமுடியுடன் பிரபல நடிகர்

இந்த நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என மொத்தம் 160-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. விக்ரம், ஆர்யா, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், அஞ்சலி, விக்ரம் பிரபு, பாண்டியராஜன், நா. முத்துக்குமார் என பலருக்கும் விருதுகளும், தங்க பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு... குட்டை டவுசர்... சிம்மிஸுடன் பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் ஜான்வி கபூர்

இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு காவியத்தலைவன் படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து உருக்கமான பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. விருது பெற காரணமான படக்குழுவிற்கு நன்றி கூறிய சித்தார்த், படத்திற்கு உரிய நேரத்திற்குள் அங்கிகாரம் கிடைக்கவில்லை என்றாலும், தற்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என கூறியுள்ளார். கவியத்தலைவன் கடந்த 2014 -ம் ஆண்டு வெளியானது. 

 தமிழ் மொழி வரலாற்று நாடகமான இதில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா மற்றும் அனைகா சோதி  நாசர், தம்பி ராமையா, பொன்வண்ணன், மன்சூர் அலிகான் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவான இந்த படம் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமைக்கப்பட்ட திரைப்படமாகும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!