சிறந்த பாடலாசிரியர்... தமிழக அரசின் 3 விருதுகளை வென்ற நா.முத்துக்குமார் - தந்தை சார்பில் விருது பெற்றார் மகன்

By Ganesh AFirst Published Sep 4, 2022, 7:18 PM IST
Highlights

பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு 2012, 2013 மற்றும் 2014 ஆகிய மூன்று வருடங்களுக்கான தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை அவரது மகன் பெற்றுக்கொண்டார். 

தமிழில் ரிலீசாகும் சிறந்த படங்களையும், அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விருது வழங்கும் விழாவை நடத்தி வந்தது. கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட இவ்விழா, அதன்பின் 14 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை வெளியான படங்களுக்கு மொத்தமாக இன்று விருது வழங்கும் விழாவை தமிழக அரசு நடத்தி வருகிறது. சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இந்த விருது விழா நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

இதையும் படியுங்கள்.... போதும்டா சாமி ஆள விடுங்க... லைகர் பட இயக்குனரின் அடுத்த படத்தில் இருந்து நைசாக நழுவிய விஜய் தேவரகொண்டா

அந்த வகையில், இதில் 2012, 2013 மற்றும் 2014 ஆகிய மூன்று வருடங்களுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதை நா.முத்துக்குமார் வென்றிருந்தார். கடந்த 2017-ம் ஆண்டே பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணமடைந்துவிட்டதால், அவருக்கு பதில் இந்த மூன்று விருதுகளையும் அவரது மகன் பெற்றுக்கொண்டார்.

நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டதும் அரங்கமே நிறைய கைதட்டல்கள் ஒலித்தன. அதேபோல் நா.முத்துக்குமாரின் மகன் விருதை பெற்றுக்கொண்ட போது லிங்குசாமி போன்ற இயக்குனர்கள் கண்கலங்கிய நிகழ்வுகளும் அரங்கேறின. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்....வாடிவாசல் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வெற்றி மாறன்..வைரல் வீடியோ !

click me!