படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பவர் ஸ்டார் சீனிவாசன்..!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

Published : Sep 29, 2021, 10:35 AM IST
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பவர் ஸ்டார் சீனிவாசன்..!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

சுருக்கம்

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு (Power Star ஸ்ரீனிவாசன்) திடீர்  உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீர்  உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லத்திகா என்ற படம் மூலமாக 2011ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சொந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமானதால் பவர் ஸ்டாரை கலாய்க்காதவர்களே கிடையாது. ஆனாலும் அந்த கலாய்களை எல்லாம் பிளஸ்சாக மாற்றிய பவர் ஸ்டார், தற்போது தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக உயர்ந்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம் பவர் ஸ்டாருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்து. அதன் பின்னர் கோலி சோடா, மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா ஆகிய படங்களில் நடித்தார்.

மேலும் செய்திகள்: ஹீரோயின் வயதில் மகள்கள் இருந்தாலும்... என்றும் இளமையோடு ஜொலிக்கும் 5 தமிழ் சினிமா நடிகைகள்!!

 

கடைசியாக கொரோனாவிற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'கேப்மாரி' திரைப்படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார். தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள இவர், பிஜிபோஸ் வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக, 'பிக்கப் டிராப்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்: வேதனையாக இருக்கிறது.. எப்போதும் நான் ஸ்டுடென்ட்ஸ் பக்கம் தான்!! நீட் தேர்வு குறித்து பேசிய சாய் பல்லவி!!

 

இந்நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீர் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, படப்பிடிப்பிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனால் படப்பிடிப்பு தலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?