அடிதூள் அப்டேட்…… தளபதி விஜய் படத்தில் இணையும் மகேஷ் பாபு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

By manimegalai aFirst Published Sep 28, 2021, 8:25 PM IST
Highlights

தளபதி விஜய் நடிக்கும் 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்ஷி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் தயாராகிறது.

தளபதி விஜய் நடிக்கும் 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்ஷி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் தயாராகிறது.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்ஷியின் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா மூவியாக இப்படம் வரவுள்ளதாக வெளியான தகவல்களால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருக்கிறனர்.

தற்போது விஜய் ரசிகர்களை மேலும் குஷியடையச் செய்யும் புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டர் மகேஷ் பாபுவும், தளபதி விஜயும் நீண்ட வருடங்களாக நண்பர்களாக உள்ளனர். மகேஷ் பாபு படங்க்ளை தமிழில் ரீமேக் செய்து கில்லி, போக்கிரி என வெற்றி விழாக்களை கொடுத்தவர் தளபதி விஜய். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் அது இந்தியா முழுவதும் சூப்பர்ஹிட்டாகும் என்று ரசிகர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக விரைவில் தொடங்கவிருக்கும் தளபதி 66 பட பூஜையில் நடிகர் மகேஷ் பாபு கலவ்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் வம்சி இயக்கத்தில்  மகேஷ்பாபு நடித்த 'மகரிஷி' திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்று தேசிய விருதையும் பெற்றது. மகரிஷி வெற்றியை தொடர்ந்து விஜய் படத்தை வம்சி இயக்குவதால் மகேஷ் பாபு பூஜையில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. மேலும் படத்தில் ஒரு காட்சியிலாவது அவரை நடிக்க வைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

click me!